Close
மே 20, 2024 8:32 மணி

புதுக்கோட்டையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா

புதுக்கோட்டை

தமாகா தலைவர் ஜி.கே. வாசன் பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவி வழங்குகிறார் மாவட்டத்தலைவர் ஆர்.எல். தமிழரசன்

புதுக்கோட்டையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் பிறந்த நாளை அக்கட்சியினர்  உற்சாகத்துடன் கொண்டாடினர்.

புதுக்கோட்டையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் பிறந்த நாள் விழா  சத்யம் ஹோட்டல் அரங்கில்   நடைபெற்ற விழாவுக்கு    புதுக்கோட்டை வடக்கு மாவட்டத் தலைவர்  ராப்பூசல்  ஆர்.எல்.தமிழரசன் தலைமை வகித்தார்.

ஏழைளுக்கு இலவச சீருடைகளும் மதிய உணவும் வழங்கப்பட்டது. முன்னதாக சாந்தநாதசுவாமி  கோயிலில் தமாகா நிர்வாகிகள், தொண்டர்கள்   சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்

இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள்  சரவணன்,   ஏ. கே.  ராமன்,  சுப்பிரமணியன்,ஆனந்த மாணிக்கம், ராம்குமார்,  திருப்பதி  உள்ளிட்ட    மாவட்ட,  வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top