புதுக்கோட்டையில் அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் வளர்ச்சி ஆய்வு மையம் (CESTADS) திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை உதவியுடன் ஐக்கிய நாடுகள் சபையின் நிலைத்தகு வளர்ச்சிக்கான இலக்குகளை விளக்குவதற்கான பிரசார உபகரணங்கள் தயாரிப்பு பயிற்சி பட்டறை புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில்நடைபெற்றது.
அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி ஆய்வு மையதிட்ட ஒருங்கிணைப்பாளர் எல்.பிரபாகரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் ம.வீரமுத்து வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கருணாகரன் கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடக்கி வைத்து பேசினார்.
திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை மாநில ஆலோசகர் முனைவர் சுஜாதா, அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி ஆய்வு மையஇயக்குனர் சுப்பிரமணி, எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார்.
உதவி திட்ட இயக்குனர் எஸ் செல்வராஜ், புதுக்கோட்டை மகளிர் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி, மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் சதாசிவம், நேரு யுவகேந்திரஒருங்கிணைப்பாளர் ஜோயல் பிரபாகர், அறிவியல் இயக்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் மணவாளன்.
மாவட்ட செயலாளர் முத்துக்குமார், மாநில நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், மாணிக்கதாய் மாவட்டஅமைப்புளின் பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தமுஎ கச நிர்வாகிகள் ராசிபன்னிர்செல்வம், கண்ணம்மா, விவேகானந்தன், நீலா, தனக்கோடி, சோபா, கமலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
பின்னர் நடைபெற்ற பயிற்சியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் பல்வேறு மகளிர் குழுக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு 9 குழுக்களாக பிரிந்து ஐக்கிய நாடுகள் சபையின் நிலைத்தகு வளர்ச்சிக் கான இலக்குகளை விளக்குவதற்கான பிரசார உபகரணங்கள் தயாரிப்பு , சுகாதார பற்றியும் ஊரக வளர்ச்சி திட்டங்கள் பற்றியும் சுகாதாரத்தை விரிவுபடுத்த திட்டம் பற்றியும் சிறந்த ஓவியங்கள் வரைந்தும் கவிதை தொகுப்பு பல்வேறு தலைமைப் பண்புகள் பயிற்சி பெற்று சமப்பித்தனர்.
பயிற்சியின் நிறைவில் மாணவர்கள், மாணவிகள், தொண்டர் களுக்கு திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை மாநில ஆலோசகர் சுஜாதா வாழ்த்துரை வழங்கினார்.பொருளாளர் விமலா நன்றி உரை கூறினார்.