Close
மே 14, 2024 9:42 மணி

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரி சார்பில் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்..!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரி சார்பில் பெண்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம்.

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தங்கம் நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரி சார்பில் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தது. முகாமிற்கு, ஏ.சி.எஸ்.மருத்துவ கல்லூரியின் தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் தலைமை தாங்கினார்.

கல்லூரி செயலாளர் ஏ.ரவிக்குமார் முன்னிலை வகித்தார். வேலூர் மாவட்ட செயலாளர் பிரம்மாஸ் ஆர்.பி.செந்தில் அனைவரையும் வரவேற்றார். முகாமில் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 830க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பெண்களுக்கு மாா்பகப் புற்றுநோய் பரிசோதனை, கா்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை, கண் பரிசோதனை, இரத்த பரிசோதனை மற்றும் மருந்து மாத்திரைகள், மருத்துவமனை சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது.

முகாமில், 15க்கும் மேற்பட்ட பெண் சிறப்பு மருத்துவர்கள் கலந்துக்கொண்டு சிகிச்சை அளித்தனர். முகாமில், குடியாத்தம் தேர்தல் பொறுப்பாளர் பாரத் மகேந்திரன், மாவட்ட ஏ.சி.எஸ் பேரவை செயலாளர் மாயா சிவா, மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜ்குமார், நகர செயலாளர் எஸ்.ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் கோட்டீஸ்வரன், நகர மாணவரணி செயலாளர் நந்தகுமார் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட மகளிர் அணி செயலாளர் உமா, மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் சங்கீதா ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

வேலூர் – சசிகுமார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top