தஞ்சை பிரவுசர் புத்தக நிலையத்தில் புத்தக சந்தை தொடக்க விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பிரவுசர் புத்தக நிலையத்தில் புத்தாண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் புத்தக சந்தை தொடக்க விழா மருத்துவ கல்லூரி சாலை இரகுமான் நகரில் நடைபெற்றது.
புத்தக சந்தை விழா ஜனவரி 15 முதல் பிப்ரவரி 15 வரை ஒரு மாத காலம் நடைபெறுகிறது. இத்தொடக்க விழாவுக்கு பெரியார் செல்லம் தலைமை வகித்தார் . மணிமொழி குணசேகரன் வரவேற்றார். நெல்லு பட்டு இராமலிங்கம் ச. சந்துரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் த. வீரசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புத்தக சந்தையை தொடங்கி வைத்து பேசியதாவது: தஞ்சையில் பிரவுசர் புத்தக உலகம் கிராமப்புற ஏழைய மாணவர்களின் அறிவாற்றலை மேம்படுத்தக்கூடிய மிகப் பெரும் பணியை சிறப்பாக செய்து வருகிறது, மாணவ மாணவிகளுக்கான அனைத்து வகையான புத்தகங்களும் இந்த புத்தக சந்தையில் கிடைக்கும்.
வருங்கால தலைமுறைகள் பெரியார், அண்ணா, திராவிட இயக்க கொள்கைகளை உள்வாங்கிக் கொண்டு வாழ்வில் உயர வேண்டும். தினந்தோறும் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
முதல் விற்பனை பிரதியை முனைவர் கனிமொழி செல்லத்துறையும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் செய்தி தொடர்பாளர் அ. ரகமதுல்லா பெற்றுக் கொண்டனர்.
மருத்துவர்கள் அருமைக்கண்ணு, அன்பு ,மலர் சிந்தியா, சிந்தனா, நீதி சிந்தியா,செந்தூர பாண்டியன், நிலவன், , முனைவர் ஜான்சி ராணி ஆகியோர் கலந்து கொண்டனர். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நூல்களைப் வாங்கிச்சென்றனர். நிறைவாக குட்டிமணி நன்றி கூறினார்.