Close
மே 20, 2024 4:53 மணி

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்.. தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும்..

புத்தகம்

புத்தக விமர்சனம்

இன்று ஒரு புத்தகம்.. தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும்..

கதையானது இளம் மாணவர் ரோடியன் ரோமானோவிச் ரஸ்கோல்னிகோவ் என்கிற ஒரு புத்திசாலியான ஆனால் குழப்பமான இளைஞனை சுற்றியே பின்னப்பட்டிருக்கிறது.
இரக்கமில்லாத ஒரு அடகு வியாபாரியை கொலை செய்கிறார்.

கொலையைத் தொடர்ந்து, அவன் குற்ற உணர்வில் சிக்கி தவிப்பதும், தன்னுடன் தாயும் சகோதரியும் ஒன்று சேருவதும், ஒரு தெருவோரத்தில் கண்ட பெண்ணுடன் காதலில் விழுவதும், இவன் செய்த கொலையைகண்டு பிடிக்க அதிகாரி துரத்துவதும் தான் கதையின் மையக்கரு.

குற்றமும் தண்டனையும் மிகவும் பரவலாக அறியப்பட்ட ரஷ்ய நாவல் மற்றும் உலக இலக்கியத்தின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகும். ஒரு கண்கவர் துப்பறியும் நாவல் எனலாம்.ஒரு சலிப்பான உளவியல் புத்தகம் என்று கூட சொல்லலாம். இதில் முக்கிய கதாபாத்திரம் கொலைசெய்வதைப் பற்றி யோசிப் பதை புத்தகத்தின் பாதி பக்கங்களும்,கொலை செய்ததையும், அதனை தொடர்ந்து எழும் குற்ற உணர்வுகளையும் மீதி பக்கங்கள் பேசுகிறது. இருப்பினும் நம்மை சிந்திக்க வைக்கும் அளவுக்கு உளவியல் ரீதியான திருப்பங்கள் புதினத்தில் உள்ளன.

ஓடிக்கொண்டே இருக்கும் கதையின் நாயகன் ரஸ்கோல் னிகோவ் மற்றும் துரத்திப்பிடிக்கும் துப்பறியும் காவல் அதிகாரி பெட்ரோவிச் இருவருக்கும் இடையேயான எலி -பூனை விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமாக சொல்லப் பட்டிருக்கிறது. எழுத்து நடை வியக்கத்தக்க வகையில் சமகால உணர்வை ஏற்படுத்துகிறது

கதாபாத்திரங்கள் குற்றங்களை செய்ய எத்தனிப்தையும் , அவர்களுக்குள் இருக்கும் இரக்கத்தையும், அவர்கள் எடுக்கும் முடிவுகளையும் விலாவாரியாக பேசுகிறது.  இளவயது இளைஞனின் இதயத்தில் எழும் குற்ற உணர்ச்சியின் விளை வுகளை பேசுவதோடு, ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவன் எழுச்சி பெற முயல்கிற போது அதற்கு முட்டுக் கட்டையாக இருக்கும் சமூக மற்றும் அரசியல் ஏற்றத்தாழ் வுகள் பற்றியும் பேசுகிறது.

ஏழ்மையும் உளவியலும் இந்த நாவலின் முக்கிய கருப் பொருள்கள். அதை அப்படியே அப்பட்டமாக காட்ட முயற்சிக் கும் ஆசிரியர், கதை நெடுக இந்த கதாபாத்திரத்தின் நல்ல குணாதிசயங்களையும், அவர்களுக்கான வெவ்வேறு பக்கங் களை, சுய தியாகங்களை நமக்குக் காட்ட தவறவில்லை. வறுமை கதைக்கு ஒரு துணை அல்ல, அது அதன் இன்றிய மையாத பகுதியாகும். அது இல்லாமல், வெறுமனே ஒரு கதை சொல்ல முடியாது.

கதைக்களம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது, நேற்று நடந்தது போல் வாசகர்களை இந்த தருணத் திற்கு இழுத்து செல்கிறது.ஒரு சில (மிகக் குறைவான)  நல்ல கதாபாத்திரங்களும் இந்த நாவலில் உள்ளன, குறிப்பாக பாலியல் தொழிலாளி சோனியா. அவளது வாழ்வியல் சூழல் மற்றும் சமூக புறக்கணிப்பு மோசமான நிலையில்இருந்த போதிலும், தன் குடும்பத்திற்காக தன்னலமற்ற அர்ப்பணி ப்பின் மூலம் தனது நம்பிக்கையையும் நன்மை யையும் தக்க வைத்துக் கொள்கிறாள்.

அவள் ரஸ்கோல்னிகோவின் தேவதையாக நடிப்பது தவிர்க்க முடியாதது. மேலும் சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை வைத் துள்ள ஒரு மனிதனின் மறுபுறம் வெளியே வர அதை திரும்பப் பெற முயற்சிப்பது அவளால் தான் சாத்தியப்படுகிறது. அது ரசனைக்குரிய விதமாக சொல்லப்பட்டிருக்கிறது.

மனம் மற்றும் உடல் ரீதியான பேரழிவுகள் இருந்தபோதிலும், கடுமையான யதார்த்தவாதத்தை நிலைநிறுத்த போராடும் நாயகனின் அர்ப்பணிப்பு வியக்க வைக்கிறது.பெரும்பா லான ரஷ்ய செவ்வியல் படைப்புகள் போலவே, இதன் முடிவும் மகிழ்ச்சியாக இல்லை. இருப்பினும், இது முற்றிலும் இருண்டது அல்ல, வெளிச்ச கீற்றுகளும் இல்லாமலும் இல்லை.

அலெக்சாண்டர், நெப்போலியன், போன்றவர்களை விரும்பிய நீட்சே, தனிமனிதன் உன்னதமானவனாக, வலிமைமிக்க வனாக இருப்பதிலேயே அவனின் இருத்தல் இருப்பதாகக் கருதுகிறார்.  நீட்சேக்கு முன்னரே தஸ்தயேவ்ஸ்கி இத்தகைய சிந்தனைகளை பெருமளவு இந்த படைப்பில் கையாண்டிருக் கிறார்.

விமர்சகர்கே. சங்கர்-இங்கிலாந்து.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top