Close
ஏப்ரல் 4, 2025 12:13 காலை

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதையும் வாக்களிக்க பணம் பெறுவதையும் தடுக்க வலியுறுத்தி மறு மலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில்ஈரோட்டில் பிரசாரம்

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்களிக்க பணம் பெறக்கூடாது என வலியுறுத்தி பிரசாரத்தில் ஈடுபட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலிவ தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதையும் வாக்குக்கு பணம் பெறுவதையும் தடுக்க வலியுறுத்தி  மறு மலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் அதன் தலைவர் வே.ஈஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள்  ஈரோட்டில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

தமிழகத்திம் கடந்த பல இடைத்தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் வெளிப்படையாக ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் இதற்கு முன்பும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள்ள வில்லை.

இதற்காக மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் சார்பாக பல மாநிலங்களிம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் வெளிப் படையாக பணமும் பொருளும் கொடுக்கப்பட்டதால் கோவை மாநகராட்சி தேர்தலை இரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தேர்தலில் ஜனநாயகத்தை காப்பாற்றும் பொறுப்பும், கடமையும் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. இந்ததேர்தலி லும் ஒட்டுக்கு பணம் பொருள் கொடுக்க அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். இதனை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

வெளி மாநில காவல்துறை அதிகாரிகளையும், காவலர்களை யும் தேர்தல் ஆணையம் தேர்தல்கண்காணிப்பாளராகவும், பாதுகாப்பாளர்களாகவும் நியமிக்கப்பட வேண்டும்.

இதனையும் மீறி பணமும் பொருளும் வாக்குக்கு கொடுக்கப் பட்டால் பணம் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து தேர்தலை நிறுத்தி விட வேண்டும். நியாயமாக தேர்தல் நடக்கும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்தலை தள்ளி வைக்கலாம்.

இந்த ஈரோடு இடைத்தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்துகின்ற தேர்தலாக அமைய வேண்டும். எந்த அரசியல் இயக்கமும் ஓட்டுக்கு பணம் வழங்க இயலாத சூழலை ஏற்படுத்த வேண்டும். இதில் தேர்தல் ஆணையம் தீவிரமான நேர்மையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெ வலியுறுத்தி மறு மலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top