மாவட்ட அளவில் நவீன மறு நில அளவை திட்டப் பணிகளை தனி உதவி இயக்குனர்கள் தலைமையில் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
களப்பணியாளர்களின் பணி சுமையை குறைத்திட வேண்டும் நில அளவை சார்ந்த அனைத்து பணிகளையும் செய்திடும் களப்பணியாளர்களின் ஒட்டுமொத்த பணியினையும் கருத்தில் கொள்ளாமல் உட்பிரிவு பட்டா மாறுதல் பணியினை மட்டும் ஆய்வுக்குட்படுத்தும் போக்கினை கைவிட வேண்டும்.
மாவட்ட அளவில் நவீன மறு நில அளவை திட்டப் பணிகளை தனி உதவி இயக்குனர்கள் தலைமையில் ஏற்படுத்த வேண்டும். நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மாறிவரும் நில அளவை தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நில அளவைத் துறையை மாற்றி அமைக்கும் முறையில் நில அளவை சார்ந்த மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் உருவாக்கப்பட வேண்டும்.
தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு என்னும் பெயரில் ஊழியர்களை தண்டனை குற்றவாளிகள் போல் நடத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் மாவட்டத் தலைவர் பொன்னையா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்