Close
நவம்பர் 22, 2024 12:26 மணி

எண்ணூரில் 30 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்த போலி மருத்துவர் கைது

சென்னை

சென்னை மணலியில் கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்

எண்ணூரில் சுமார் 30 ஆண்டுகளாக கிளினிக் நடத்திய போலி மருத்துவர் சுதர்சன்குமார்(55) என்பவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

எண்ணூர் பகுதியில் சுதர்சன் குமார் போலியாக கிளினிக் நடத்தி வருவதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்குமாறும் சென்னை மண்டல ஊரக மற்றும் மருத்துவ சுகாதார சேவை இணை இயக்குனர் டாக்டர் விஸ்வநாதன் எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனடிப்படையில் புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார் எண்ணூர் நேதாஜி நகர் பகுதியில் கிரிஜா கிளினிக் என்ற மருத்துவமனையில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது சுதர்சன் குமார் அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது யோகாவில் பட்டம் பெற்றிருந்த சுதர்சன் குமார் எம்.பி.பி.எஸ். படிக்காமலேயே அல்லோபதி மருத்துவம் பார்த்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த மருந்து, மாத்திரைகளை கைப்பற்றி போலி மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.

இது குறித்து எண்ணூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து போலி மருத்துவர் சுதர்சன் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர். மருத்துவம் படிக்காமலேயே சுதர்சன்குமார் சுமார் 30 ஆண்டுகளாக போலி கிளினிக் நடத்தி வந்திருப்பது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top