Close
மே 16, 2024 7:01 மணி

திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ.5 கோடியில் திட்டப் பணிகள் மேற்கொள்ள ஒப்புதல்

சென்னை

திருவொற்றியூர் மண்டலத்தில் வளர்ச்சிப்பணிகளுக்கு அனுமதி

திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ.5 கோடியில் திட்டப் பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி மண்டலக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்திற்குட் பட்ட  பகுதிகளில் சுமார் ரூ.5 கோடியில் திட்டப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி மண்டலக் குழு கூட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலக் குழு மாதாந்திரக் கூட்டம் மண்டலக் குழுத் தலைவர் தி.மு. தனியரசு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மண்டல அலுவலர் சங்கரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் திருவொற்றியூர், எண்ணூர், கத்திவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அடங்கியுள்ள 14 வார்டுகளில் நிர்பயா திட்டத்தின்கீழ் சுமார் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் புதிய மின்கம்பங்கள், புதைமின் வடங்கள் மாற்றியமைக்கவும், ரூ. 2 கோடி மதிப்பீட்டில் சாலைகள்.

மண்டலத்தில் அமைந்துள்ள அனைத்து கழிப்பிடங்களையும் பராமரித்து இயக்குதல் திட்டத்திற்காக ரூ. 1.35 கோடி மற்றும் இதர பணிகள் என ரூ. 5 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.   கூட்டத்தில் சுமார் 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top