Close
மே 16, 2024 7:59 காலை

மழை பாதிப்பு சேதம்… புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய குழு நேரில் ஆய்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பெருங்களூர் நெல் கொள்முதல் மையத்தை ஆய்வு செய்த மத்திய குழுவினர்

புதுக்கோட்டை மாவட்டம் பெய்த மழையை அடுத்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பதம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு முன்னிலையில் மைய தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சி.யூனுஸ், பிரபாகரன் , ஒய்.போயோ ஆகியோர் கொண்ட  மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை வட்டம், பெருங்களூர் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பதம் குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு முன்னிலையில்;  (10.02.2023) மைய தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சி.யூனுஸ்பிரபாகரன், ஒய்.போயோ ஆகியோர் கொண்ட குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு  கூறியதாவது:

வங்கக் கடல் மற்றும் அதன் அருகில் உள்ள மத்திய இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதன் காரணமாக தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. இக்கனமழையால் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நெற்பயிர் உள்ளிட்ட வேளாண் பயிர்களை மழை நீர் சூழ்ந்து, மகசூல் பாதிப்படைந்தது.

பருவம் தவறி பெய்த  கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவலறிந்ததும்  தமிழ்நாடு முதலமைச்சர், மூத்த அதிகாரிகளை பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்திடவும், விவசாயகளிடம் நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறியவும் உத்தரவிட்டார்.

அதனடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை யினால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை, வேளாண் துறை இயக்குநர் ஆ.அண்ணாதுரை 03.02.2023 அன்றும் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்  08.02.2023 அன்றும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளை சந்தித்து கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல், கனமழையால் பாதிக்கப்பட்ட அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை நேரடிக் கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்திடும்போது, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, 22 சதவிகிதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்திட உரிய தளர்வுகளை வழங்கிடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இந்தியப் பிரதமர் 05.02.2023 அன்று கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதன் அடிப்படையில் டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால் நெல்லின் ஈரப்பதம்;; குறித்து பார்வையிடுவதற்காக மத்திய குழு அலுவலர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை புரிந்து, புதுக்கோட்டை வட்டம், பெருங்க@ர், கந்தர்வக்கோட்டை வட்டம், கல்லாக்கோட்டை, கறம்பக்குடி வட்டம், ரெகுநாதபுரம், தட்டாமனைப்பட்டி, குளத்தூர்நாயக்கர்பட்டி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பதம் குறித்து உரிய கருவிகள் மூலமாக ஆய்வு மேற்கொண்டனர். மத்திய குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் நெல்கொள்முதல் பணிகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) திரு.பெ.வே.சரவணன், வேளாண்மை இணை இயக்குநர் திரு.மா.பெரியசாமி, நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் திரு.எம்.சீதாராமன், துணை மேலாளர் (தரக்கட்டுபாடு) திரு.பன்னீர்செல்வம், வட்டாட்சியர் திருமதி.விஜயலெட்சுமி மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top