போதை இல்லாத சமூகம் அமைப்போம் இளைஞர்களை மீட்போம் என்ற முழக்கத்துடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதைக்கு எதிராக கையெழுத்து இயக்கம் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
கடந்த 10 ஆண்டுகளில் 70% போதைப் பழக்கங்கள் அதிகரித்துள்ளது சமூகத்தை சீரழிக்கின்ற கஞ்சா அபின் ஹெராயின் போன்ற கொடிய போதைக்கு இந்தியாவில் 10 கோடி பேர் அடிமையாகி உள்ளனர்.
இதில் பெரும்பாலானவர்கள் உழைப்பை நம்பி அன்றாட பிழைப்பு நடத்தும் சாதாரண ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் உள்ளனர். இந்த போதை பழக்கத்தினால் கொலை கொள்ளை கற்பழிப்பு என பெரும் குற்றங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த போதை பழக்கத்தில் உள்ளவர்களை மீட்டெடுக்கும் வகையில் போதை இல்லாத சமூகம் அமைப்போம் இளைஞர்களின் மீட்போம் என போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் புதுக்கோட்டை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது இதில் இந்திய ஜனதா வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்களும் மற்றும் பொதுமக்கள் பெண்கள் என ஏராளமான கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு கையெழுத்துச் சென்றனர்.