Close
நவம்பர் 22, 2024 6:07 மணி

உழவன் செயலி பற்றி விவசாயிகளுக்கு பயிற்சியளித்த புஷ்கரம் வேளாண் கல்லூரி மாணவிகள்

புதுக்கோட்டை

அரிமளம் அருகே கீழப்பனையூர் கிராமத்தில் உழவன் செயலி பற்றி விவசாயிகளுக்கு பயிற்சியளித்த புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள்

புதுக்கோட்டை அருகே புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில்  நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள்,  கிராம வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக கிராமப்புற தங்கல் பயிற்சி திட்டத்தின் கீழ்,  அரிமளம் ஒன்றியத்தில் தங்கி பயின்று வருகின்றனர்.

அதனடிப்படையில், அரிமளம் ஒன்றியம்  கீழப்பனையூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உழவன் செயலி பற்றியும், அதன் அவசியம் பற்றியும் புஷ்கரம் வேளாண் ‌அறிவியல்‌ கல்லூரியில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகள் ஜான்சி, ஜெயந்தி, ஜிம்சிரேச்சல், கமலபிரியா,ஜெ.காவியா மற்றும் ம. காவியா, கார்த்திகா, கீர்த்தனா, வெ. கிருத்திகா, க.கிருத்திகா, பாரதி ஆகியோர் பயிற்சியளித்தனர்..

மேலும் விவசாயிகளுக்கு பயன்படும் உழவன் செயலியினை அவர்களது கைபேசியிலேயே  பதிவிறக்கம் செய்து அதை பயன்படுத்துவது பற்றி  செயல்விளக்கம் செய்து  காட்டினர்.இதில் ஏராளமான விவசாயிகள்  பங்கேற்று பயன்பெற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top