Close
மே 17, 2024 6:02 காலை

நெல் சாகுபடியில் இலைச்சுருட்டு புழுவைக் கட்டுப்படுத்திட வேளாண்துறை ஆலோசனை

புதுக்கோட்டை

நெல் சாகுபடியில் இலைச்சுருட்டு புழுவைக் கட்டுப்படுத்த வேளாண்துறை யோசனை

நெல் சாகுபடியில் இலைச்சுருட்டு புழுவைக் கட்டுப்படுத்திட
புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வேளாண் இணை இயக்குநர்(பொ) மெ.சக்திவேல் வெளியிட்ட தகவல்: தற்பொழுது நிலவும் தட்பவெப்ப நிலை காரணமாக சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் இலைச்சுருட்டுப்புழு மற்றும் தண்டு துளைப்பான் ஆங்காங்கே காணப்படுகிறது.

இதனை விவசாயிகள் ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திடஇலைச்சுருட்டுபுழுக்கள் நெற்பயிரின் இலைகளை ஒன்றிணைத்துக் கொண்டு அவற்றிலுள்ள பச்சையத்தைச் சுரண்டி உண்பதால் இலைகளில் வெள்ளை வெள்ளையாகக் காணப்படும்.

இவ்வாறு பச்சையம் முழுவதும் சுரண்டப்பட்ட நிலையில் பயிர் எரிந்ததுபோல் காணப்படும். இதன் தாக்குதல் வயல் ஓரங்களில் நிழலான பகுதிகளிலும் அதிகமாக உரம் இடப் பட்ட பகுதிகளிலும் மிகுந்து காணப்படும். புரட்டாசி மாதத்தி லிருந்து மார்கழி மாதம் வரை தாக்குதல் அதிகமாகக் காணப்படும்.
இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்திட வரப்புகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தழைச்சத்தினைப் பரிந்துரை அளவுக்கு மேல் இடாமல், தேவையான தழைச் சத்தினை மூன்று அல்லது நான்கு தடவையாகப் பிரித்து இட வேண்டும்.
விளக்குப்பொறியினை மாலை 6.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஒளிரவிட்டுத் தாய் அந்துப்பூச்சிகளைக் கவர்ந் தழிக்கலாம். முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோ கிரம்மா கைலோனிஸ் ஏக்கருக்கு இரண்டு சி.சி. அளவு, நடவு செய்த 37, 44 மற்றும் 51ஆம் நாட்களில் காலை நேரத்தில் வயலில் விட்டு இப்புழுவின் முட்டைக் குவியலை அழிக்கலாம்.

ஒரு கூடைத் தவிட்டில் 100 மி.லி. மண்ணெண்ணெய்யைக் கலந்து வயலில் விசிறுதல் வேண்டும். பின்னர், ஏறத்தாழ எட்டடி நீளமுள்ள வைக்கோல் பிரியை வயலின் இரு பக்கங் களிலும் பக்கத்திற்கொருவர் பிடித்துக்கொண்டு நெற்பயிரின் மேல் நன்கு படுமாறு இழுத்துச்செல்ல வேண்டும்.

இதனால் நெல்லின் இலைப்பகுதி வைக்கோல் பிரியில் பட்டு நிமிரும்போது மடக்கப்பட்ட இலைப்பகுதி விரிந்துவிடும். இதனால் இப்புழுக்கள் கீழே விழுந்து மண்ணெண்ணெய் கலந்த நீரில் விழுந்து மடிந்துவிடும். மேலும், மூன்றடி உயரம் கொண்ட குச்சிகளைப் பறவை இருக்கையாக அமைத்துப் பறவைகளைக் கவர்ந்து அவை தாய்ப் பூச்சிகளைக் பிடித் துண்ண வழிவகை செய்யலாம்.

இவ்வாறு ஒருங்கிணைந்த முறையில் இப்புழுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், இலைச்சுருட்டுபுழுவின் தாக்குதல் மட்டுப்படவில்லையெனில், ஏக்கருக்கு கார்டாப் ஹைட்ரோகுளோரைடு  4G என்ற குருணை மருந்தினை 7.5 கிலோ முதல் 10 கிலோ வரை மண்ணில் இட வேண்டும். அல்லது தையோமெத்தோசம் 25 டபுள்யூஜி 40 கிராம், டிரைஅசோபாஸ் 40 ஈசி 250 மி.லி. முதல் 500 மி.லி. வரை, குளோர்பைரிபாஸ் 20 ஈசி 750 மி.லி.

குளோரான்டிரானிலிபுரோல் 24 எஸ்.சி 30 மி.லி. முதல் 40 மி.லி. வரை, புளுபென்டையமைடு 39.45 ஈசி 30 மி.லி. முதல் 40 மி.லி. வரை, பிப்ரோனில் 80 டபுள்யூஜி 20 கிராம் முதல் 25 கிராம் வரை இவற்றுள் ஏதேனும் ஒரு மருந்தினை 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

புதுக்கோட்டை
நெல் சாகுபடியில் இலைச்சுருட்டு புழு தாக்குதல்

தண்டு துளைப்பான்: குருத்துப்பூச்சி எனப்படும் தண்டு துளைப்பானின் தாக்குதலால் இளம்பயிரில் நடுக்குருத்து வாடிக் காய்ந்துவிடும். கதிர் பிடிக்கும் தருணத்தில் தாக்குதல் ஏற்படின் மணி பால் பிடிக்காமல் சாவியாகி வெண்கதிர்க ளாக மாறி மகசூல் பாதிப்படைகிறது.

இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்திட நாற்றுகளை நெருக் கமாக நடுவதைத் தவிர்த்து தேவையான தழைச் சத்தினை மூன்று அல்லது நான்கு தடவையாகப் பிரித்து இடுதல் வேண்டும்.
முதிர்ந்த நாற்றுகளை நடும்போது நுனியைக் கிள்ளிவிட்டு நடுவதனால் குருத்துப்பூச்சியின் முட்டைக் குவியல்களை அழித்துவிடலாம். விளக்குப்பொறியினை மாலை 6.30 மணிமுதல் இரவு 10.00 மணிவரை ஒளிரவிட்டுக் குருத்துப் பூச்சியின் தாய் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்தழிக்கலாம்.

மேலும் அதிக அளவில் குருத்துப்பூச்சியின் தாக்குதல் இருந்தால், ஏக்கருக்கு கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 4ஜி 7.5 கிலோ மண்ணில் இடலாம்  அல்லது குளோரான்டிரானி லிபுரோல் 24 எஸ்.சி 40 மி.லி., புளுபென்டையமைடு 39.45 ஈசி 30 மி.லி. இவற்றுள் ஏதேனும் ஒரு மருந்தினை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

உழவன் செயலி மேலும் விவசாயிகள் தங்கள் பயிர்சாகு படியில் பூச்சி மற்றும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடன் உழவன் செயலி மூலம் படம் பிடித்து அனுப்பினால் 24 மணி நேரத்திற்குள் தங்களுடைய அலைபேசிக்கு உரிய பரிந்துரை அனுப்பி வைக்கப்படும். எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எனவே விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையில் நெற்பயிரினை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தி டுமாறு வேளாண்மை இணை இயக்குநர்;(பொ) மெ.சக்திவேல் அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top