புதுக்கோட்டை மாவட்டம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவிகள் ,கிராம வேளாண் பணி அனுபவத்திட்டத்தின் ஒரு பகுதியாக அன்னவாசல் அருகே கீழக்குறிச்சி கிராமத்தில்,சாலை வேலம்மாள் என்ற விவசாயின் நிலத்தில் பலபயிர்நடவு பணியில் ஈடுபட்டனர்.
பல பயிர் முறை (Multiple cropping) என்பது விவசாயத்தில் ஓர் இடத்தில் பல பயிர்களை பல்லுயிர் சாகுபடி முறையின் மூலம் நிலத்தில் சத்தை நிலைத்து இருக்கச் செய்வது மட்டுமின்றி , உற்பத்தியைப் பெருமளவிற்கு பெருக்கி நன்மை அடைய உதவும் ஒரு முறை ஆகும்.
இவ்வாறு செய்யும் முறையில் ஓரின சாகுபடி முறையும் ஒன்றாகும். சாலைவேலம்மாள் அவருடைய நிலத்தில் வாழை, இஞ்சி, மஞ்சள், பாக்கு, ஏலக்காய், மிளகு, காபி ஆகியவற்றை பலபயிர் முறையில் நடவு செய்ய உள்ளார் .
இதன் முதற்கட்டமாக மாணவிகள் 200 வாழை மரக்கன்று களை நட்டனர்.வாழையில் எலக்கி, நவராசெவ்வாழை, மலைவாழை போன்ற ரகங்களையும் மற்ற பயிர்களில் நாட்டு ரகங்களையும் கொள்ளிமலையில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறினர்.
பின்பு அவர் மாணவிகளிடம் பலபயிர் முறையை பின்பற்றுவதால் வரும் பயன்களையும் அதன் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இதன் மூலம் இரடிப்பு லாபம் பெறுவதன் வழிமுறைகளையும் விளக்கினார்.