Close
நவம்பர் 22, 2024 10:36 காலை

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தில் தனியார் மய நடவடிக்கைகளை திரும்ப பெற வலியுறுத்தல்

தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்ற போக்குவரத்துக்கழக ஓய்வூதியர் (ஏஐடியுசி) சங்க கூட்டம்

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தில் தனியார் மய நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டுமென ஏஐடியூசி ஓய்வுபெற்றார் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு வரும் ஓய்வுபெற்றார் சங்க நிர்வாக குழு கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட அலுவலகத்தில் சங்கத் தலைவர் மல்லி .ஜி தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

பொதுச்செயலாளர் பி.அப்பாதுரை நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார் .  ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி. சந்திரகுமார், மாவட்ட தலைவர் வெ.சேவையா, அரசு போக்குவரத்து சம்மேளன துணைத் தலைவர் துரை.மதிவாணன், ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் அ.சுப்பிரமணியன், கே.சுந்தரபாண்டியன், வி.கலியமூர்த்தி, பி.குணசேகரன், அ.இருதயராஜ், டி.ரெஜினால்டு ரவீந்திரன், சாந்தி சுந்தர்ராஜ், பானுமதி பாஸ்கர், தேவி பாரதி. உள்ளிட்டார் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இதுநாள் வரை தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை, ஆனால் தற்போது 500 அரசு பேருந்துகள் தனியாருக்கு விடும் தமிழ்நாடு அரசின் முடிவை ஏஐடியூசி கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதுடன், உடனடியாக தனியார் மய நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

போக்குவரத்து கழகங்களில் எவ்விதமான தனியார் மய நடவடிக்கைகளையும் புகுத்தக் கூடாது.  ஓட்டுநர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட காலி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டும்.

கடந்த இரண்டு வருடங்களாக ஓய்வு பெற்றவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கடை உள்ளிட்ட ஓய்வு கால பணப்பலனகள் வழங்கப்படாததை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்கள் அகவிலைப்படி வழக்கில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். மேல் முறையீடு செய்துள்ளதை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top