Close
நவம்பர் 22, 2024 6:35 மணி

அமரபணீஸ்வரர் கோயிலில் ரூ.20 லட்சத்தில் கிரானைட் தரைத்தளம்

ஈரோடு

அமர பணீஸ்வரர் கோயில் வளாகத்தில் நடைபெறும் கிரானைட் கற்கள் பதிக்கும் பணி

அமரபணீஸ்வரர் கோயிலில் ரூ.20 லட்சம் மதிப்பில் கிரானைட் கற்களால் தரைத்தளம்  அமைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், கோபி அருகேபாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோயிலில்,  இக்கோயில் குண்டம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது குண்டம் திருவிழாவின்போது ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி பல மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி செய்கின்றனர்.

இது கோயில் 4 -ஆவது கும்பாபிஷேக விழா,கடந்த 2003ல் நடந்தது. தற்போது, 5 -ஆவது கும்பாபிஷேகம் ஏப்ரல் 26 ம் தேதி நடக்க உள்ளது கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கொண்டத்துக்காளியம்மன் மற்றும் அமரபணீஸ்வரர் கோயிலில் திருப்பணி முடிந்துள்ளது.

அமர பணீஸ்வரர் கோயில் வளாகத்தை சுற்றிலும் கிரானைட் கற்கள் பதிக்கும் பணி பச்சமலை திருப்பணி குழு தலைவர் ஈஸ்வரன் ராமலிங்க மூர்த்தி, முன்னாள் அறங்காவலர் சண்முகம், ப்ளூ ஸ்டார் திருநாவுக்கரசு ஆகியோர் பங்களிப்பில் ரூ. 20 லட்சம் மதிப்பில் இப்பணி நடக்கிறது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில் அமரபனிஸ்வரர் கோயில் வளாகத்தில் பத்தாயிரம் சதுர அடியில் கிரானைட் கற்களால் தரைத்தளம் அமைக்கும்  பணி நடக்கிறது இதற்காக ஆந்திரா மாநிலம் குப்பத்தில் இருந்து நான்கு லோடு கிரானைட் கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளது கும்பாபிஷேகத்திற்குள் இப்பணி நிறைவு பெறும் என்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top