Close
செப்டம்பர் 20, 2024 9:01 காலை

உலக வன நாளில் உங்களுடன் சில பகிர்வு…

அயலகத்தமிழர்கள்

உலக வன நாள்

ஒரே ஒரு மரம் அழிவதால், பறவை, பூச்சிகள், விலங்குகள் என குறைந்தது நான்கு வகை உயிரினங்கள் உணவு, இருப்பிடம் இழந்து அழிகிறது. அப்படியானால் ஒரு காடு அழிவதால் எவ்வளவு உயிரினங்கள் இருப்பிடம் இழக்கும்? அழியும்?

விலங்குகள், பறவைகள், பூச்சிகள் அழியும் போது அது உணவுச் சங்கிலியில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தேனீகளும், வண்ணத்துப்பூச்சிகளும் இல்லையென்றால் இவ்வுலகமே இல்லை என்பது நாம் அறிந்ததே.

காடுகள் உருவாக முக்கிய காரணம், பூச்சிகள், பறவைகள் மற்றும் தாவர உண்ணிகளும் தான். அவை தாவரங்களை உண்டு, நெடுந்தூரம் பறந்து/ நடந்து சென்று எச்சமிட்டு அதன் விதைகளை பரப்புகிறது.

விலங்குகளில் யானை இப்பணியை செவ்வனே செய்கிறது. யானை தான் உண்ணும் உணவில் பாதியை கூட ஜீரணிக்கா மல் சாணமிடுவதால் அதன் சாணத்தில் இருக்கும் விதைகளும் குச்சிகளும் அதிகம். அவற்றின் முளை திறனும் அதிகம்.

ஒரு யானை தனது வாழ்நாளில் 18 லட்சம் மரங்களை உருவாக்குகிறது என ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அப்படியெனில் ஒரு யானை அழிவது ஒரு காடு அழிவதற்கு சமம். இவ்வாறு ஒரு காட்டினை உருவாக்க சில உயிரினங்கள் பாடுபடுவது போல், அதனை அவ்வப்போது புதுப்பித்து உயிர்ப்புடன் வைக்க சில உயிரினங்கள் தேவைப்படுகிறது. அவற்றில் முக்கியமானது புலி.

யானை காட்டினை உருவாக்குகிறது என்றால், புலி காட்டினை பராமரிக்கிறது என சொல்லலாம். உணவுச்சங்கிலியின் உச்சத்தில் இருப்பது புலி. மேற்கு தொடர்ச்சிமலையில், ஒரு புலி இறந்தால் டெல்டா பகுதியில் 10,000 ஏக்கர் நிலம் நீரின்றி தரிசாகும் என்பது மறைமுக விளைவு. புலிகள் ஒரு காட்டின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கிறது. புலிகள் தாவர உண்ணிக ளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், பல்லுயிர் பெருக்கத்திற்கு, சூழலியல் சமநிலைக்கு பெரிதும் உதவுகிறது.

காடுகள் அழிவதால், பருவமழை பொய்க்கும். பல நுண்ணுயிர் கள் அழியும், உணவுச் சங்கிலி அறுபடும், சூழல் மாசு அதிக ரிக்கும். காற்றில் பிராண வாயுவின் அளவு குறையும்,மண் சரிவு ஏற்படும், நிலத்தடி நீர் குறையும், தட்ப வெப்ப சமநிலை பாதிக்கப்படும், புயல் அதிகரித்து சேதம் உண்டா ம், மரம் சார்ந்த தொழில்கள் நலிவடையும். இவையெல்லாம் உடனடி சிக்கல்கள். ஆனால் இது காலப்போக்கில் நீடிக்கும் போது விளைவுகள் இதைவிட கடுமையானதாக, மோசமானதாகவே இருக்கும்

உயிர் பன்மைத்துவ அழிப்பு, மேய்ச்சல் தரை அழிப்பு, விலங்கின அழிப்பு, கிராமிய மற்றும் ஆதிவாசி மக்களின் வாழ்க்கை முறை அழிப்பு .., என்று இப்படி அடுக்கிக் கொண்டு போனால் இறுதியில் இந்த பூவுலகில் காடு வெட்டும் “மானுடம்” மட்டும் தப்பி நிற்கும். இது பேராபத்து மிக்க அபத்தமாக அல்லவா?!

இங்கிலாந்திலிருந்து சங்கர் 🌴🌳🌿

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top