உலக தண்ணீர் நாள் மார்ச் 22-ஆம் தேதி கொண்டாடப் படுகிறது.
1993-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா சபையின் 47 -வது கூட்டத் தொடரில் உலக தண்ணீர் நாள் அறிவிக்கப்பட்டது. நீர்நிலைகளைக் காப்பதும், நீர்வளத்தைப் பெருக்குவதும் தான் உலக தண்ணீர் நாளின் நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை மையமாக கொண்டு உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
பொதுவாக பூமியில் நிலப்பரப்பானது வெறும் 30 சதவிகிதம் மட்டும் தான்.மீதம் இருக்கும் 70 சதவிகிதம் நீர்பரப்பாக தான் உள்ளது.70 சதவிகிதம் நீர்பரப்பு இருந்தாலும் அதில் 97.5 %
உப்பு நீர்பரப்பு தான் இருக்கிறது. இதில் நிலத்தடிநீர் வெறும் 2.5% தான். அதில் பனிப்பாறைகளாகவும், பனித்தரைகளா கவும் உள்ளது போக, மீத நன்னீர்ப் பரப்பு 0.26 % தான்.
இந்த நீரைத்தான் உலக மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். 30% நிலப்பரப்பில் வசிக்கும் மக்களுக்கு 0.26 சதவிகிதம் நீர் தான் உயிராதாரம். இந்த நீரைத்தான் மனிதனின் தேவைகளுக்கும், விவசாயம் என பல வழிகளில் பயன்படுத்தி கொள்கிறோம்.
கிராமப்புறங்களில் வாழும் இந்தியர்களில் 6.3 கோடி பேருக்கு சுத்தமான நீர் என்பது எட்டாக் கனியாகத்தான் இருக்கிறது என்று வாட்டர் எய்டு அறிக்கை கூறுகிறது. தமிழ்நாடு தண்ணீருக்காக இன்று அருகில் இருக்கும் மூன்று மாநிலங்களிடமும் கெஞ்சும் நிலை தான் இருக்கிறது.
தண்ணீருக்கு தவிக்கும் தமிழ்நாட்டிற்கு வளர்ச்சி என்ற சொல்லைக் காட்டி இயற்கை எரிவாயுவையும், அணு உலையையும் தீர்வாகத் தருகிறது நம்மை ஆளுகிற அரசு. இந்த வளர்ச்சி என்ற சொல், தமிழ்நாட்டு விவசாயிகள் தண்ணீரின்றி வறட்சியால் உயிர் விடும் போது எங்கே போனது என்று தெரியவில்லை.
இந்த ‘உலக தண்ணீர் நாள்’ என்பது, கோடைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் தண்ணீரைப் பற்றிய விழிப்பு உணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டது. ‘தண்ணீர் ஒரு மனிதனின் வாழ்வாதாரம்’ என்பதை ஒவ்வொரு மனிதனும், அந்நாட்டு அரசும் புரிந்து கொள்ளும் வரையில் இதற்குத் தீர்வு கிடைக்காது.
“Smallest of the efforts towards saving water counts.” Let us not forget how important water is for all of us.Happy World Water Day.
இங்கிலாந்திலிருந்து சங்கர் 💦💧💦