Close
மே 17, 2024 3:41 காலை

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான சதுரங்கப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடந்த மாவட்ட செஸ் போட்டிகளில் பரிசு வென்ற வீரர்கள்

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப்போட்டியில் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான சதுரங்கப்போட்டி மாமன்னர் கல்லூரியில் புதன்கிழமை நடை பெற்றது . இதில் தமிழ்நாடு மாநிலப் போட்டிகளில் பங்கு பெறப்போகும் புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க வீரர்களை தேர்வு செய்வதற்கான சதுரங்கப் போட்டியினை, மாமன்னர் கல்லூரி முதல்வர் திருச்செல்வம் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழகப் பொறுப்பாளர்கள் முனைவர் கணேசன், அடைக்கலவன், ஜெயக்குமார், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போட்டிகள்,  ஏழு, ஒன்பது, பதினொன்று, பதினைந்து , பதினேழு, பத்தொன்பது, இருபத்தைந்து வயத்துக்குள்பட்ட சிறுமியர் மற்றும் மூத்தவர்கள் ஆகிய பிரிவுகளில்  நடைபெற்றது. சதுரங்கப்போட்டியில் 250 -க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கு பெற்றனர்.

புதுக்கோட்டை
செஸ் போட்டியில்பரிசு வென்றவர்களுடன் நிர்வாகிகள்

போட்டிகளில் வென்றவர்கள் விவரம்:

ஏழு வயதுக்கு உட்பட்டவர்கள்: சிறுவர் பிரிவு: முதலிடம் கவிரூபன், இரண்டாமிடம் அக்ஷரன், மூன்றாமிடம் ஜீவன். சிறுமியர் பிரிவு : முதலிடம் சுபாஷினி, இரண்டாமிடம் மகிழினி, மூன்றாமிடம் ஆஷிகா.

ஒன்பது வயதுக்கு உட்பட்டவர்கள்: சிறுவர் பிரிவு:  முதலிடம் திலக்,  இரண்டாமிடம் சாய் செந்தூரேஸ்வரன், மூன்றாமிடம் சஞ்சய். சிறுமியர் பிரிவு :முதலிடம்  விகாஸினி,  இரண்டாமிடம்  யாழினி, மூன்றாமிடம் ரேஷ்மி.

பதினொன்று வயதுக்கு உட்பட்டவர்கள்: சிறுவர் பிரிவு:  முதலிடம் ஹரிஷ் ராம் ஹரி,  இரண்டாமிடம்  இமான், மூன்றாமிடம் பாலசதுர்த்தியான் .சிறுமியர் பிரிவு : முதலிடம் ஆஷிகா வர்ஷினி, இரண்டாமிடம் ஜோசிகா தேவி, மூன்றாமிடம் அம்ரிதா ப்ரீத்தம் .

பதின்மூன்று வயதுக்குட்பட்டவர்கள் :

சிறுவர் பிரிவு முதலிடம்  கிருதேஸ்வரன், இரண்டாமிடம் ரோஹித் தங்கம், மூன்றாமிடம் கவிபாரதி.சிறுமியர் பிரிவு : முதலிடம் தர்ஷினி , இரண்டாமிடம்ஸ்ரீநிதி , மூன்றாமிடம் ரதி.

பதினைந்து வயதுக்குட்பட்டவர்கள:

சிறுவர் பிரிவு :முதலிடம் ஆரிஸ், இரண்டாமிடம் இம்ரான்,  மூன்றாமிடம் எஸ்.பி.எஸ். விஸ்வநாதன்.சிறுமியர் பிரிவு : முதலிடம் கனிஷ்கா ரோஷிணி , இரண்டாமிடம் -அம்சவல்லி ,  மூன்றாமிடம் ஷன்மதி.

பதினேழு வயதுக்குட்பட்டவர்கள் :சிறுவர் பிரிவு :முதலிடம்  நவீன்,  இரண்டாமிடம் ஹரிஹரன்.சிறுமியர் பிரிவு : முதலிடம் ஜோதிகா, இரண்டாமிடம்  தாட்சாயணி.

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டவர்கள்:சிறுவர் பிரிவு:  முதலிடம் ஜெய் பிரதீஷ்,  இரண்டாமிடம்  ராகுல், மூன்றாமிடம் அஜித்.

இருபத்தைந்து வயதுக்கு உட்பட்டவர்கள்:ஆடவர்  பிரிவு: முதலிடம் தினேஷ் கண்ணன், இரண்டாம் இடம் சிவமணி கண்டன்,  மூன்றாமிடம் ஆல்வின். மகளிர் பிரிவு: முதலிடம் அபர்ணா.

சீனியர் – ஆடவர் பிரிவு: முதலிடம் மொஹமத்இக்பால், இரண்டாமிடம்ஸ்ரீதர், மூன்றாமிடம் உசைன். மகளிர் பிரிவு: முதலிடம் விஸ்வஸ்ரீ, இரண்டாமிடம் சிவ சங்கரி,  மூன்றாமிடம் கலையரசி   ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இவர்களுக்கு வெற்றிக்கோப்பை, ரொக்கப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் மாமன்னர் கல்லூரி முதல்வர் திருச்செல்வம் பாராட்டி வழங்கினார்.

நிகழ்வில் , புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழக நிர்வாகிகள் பேராசிரியர் கணேசன், அங்கப்பன், அடைக்கலவன், புதுகை செல்வம், பாரதிதாசன், வினிதா, செல்வன் மற்றும் நடுவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top