Close
நவம்பர் 10, 2024 5:41 காலை

காவல்துறை மானியக்கோரிக்கை… புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்றுவாரா முதலமைச்சர்…?

புதுக்கோட்டை

காவல்துறை மானிய கோரிக்கை

புதுக்கோட்டையில் தானியங்கி வாகன பராமரிப்பு பணிமனை அமைக்கப்படுமா ?

புதுக்கோட்டைக்கு காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை வாகனங்களை பராமரித்து பழுது நீக்கம் செய்யக்கூடிய வகையில் பல்வேறு மாவட்டங்களில் உள்ளதைப் போல தானியங்கி பணிமனையை அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இங்குள்ள வாகனங்களை பழுது பார்ப்பதற்காக இங்கிருந்து 50 கிமீ தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் நேர மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளை காவலர்கள் சந்தித்து வருகின்றனர்.

காவல்துறை வாகனங்கள் உள்பட பல்வேறு அரசுத் துறை வாகனங்களை பழுது நீக்கம் மற்றும் பராமரிக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையானது 14 பணிமனைகள் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சென்னையில் பொருள் மேலாண்மை அலகுடன் இயங்கி வருகிறது.

தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறை தொடங் கப்பட்ட காலத்தில் சென்னை மற்றும் தஞ்சாவூரில் என இரண்டு பணிமனைகள் மட்டுமே இருந்தன 1959 -ஆம் ஆண்டு மதுரை மற்றும் சேலத்தில் என இரண்டு பணிமனைகள் தொடங்கப்பட்டன.

காவல் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை வாகனங்களை தவிர அனைத்து துறை வாகனங்களும் தமிழ்நாடு துறை வாகனக் கட்டுப்பாட்டு விதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன.மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையானது சுமார் 100 வாகனங்களை கட்டுப் பாட்டில் கொண்டிருந்தது.

அரசின்  விரிவாக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக 1955 முதல் 1964  வரை வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. தமிழ்நாடு அரசு துறை வாகனக் கட்டுப்பாடு விதிகளின்படி நிர்வகிக்கப்படும் அனைத்துத் துறைகளும் வாகனங்களையும் மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறை யில் பழுதுபார்ப்பதற்கும், பராமரிப்பதற்கும் சட்டப்பூர்வமாக் கப்பட்டது.

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் விளைவாக, நிறுவப்பட்ட பணிமனைகளில் போதுமானதாக இல்லை என்பதால் பணிமனையினை விரிவாக்கம் செய்ய திட்டமி டப்பட்டது. பழுது நீக்கம் செய்ய வசதியாக 1964 ஆம் ஆண்டில் வருவாய் துறை கட்டுப்பாட்டிலிருந்து பிரிக்கப்பட்டு, தமிழ் நாடு அரசு போக்குவரத்துத் துறையுடன் இணைக்கப் பட்டது.

1966 ஆம் ஆண்டில் பல்வேறு நல திட்டங்களின் மூலம் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு கூடுதல் கருவிகள், உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை வழங்குவதற்கும் ஒரு பெரிய மறுசீரமைப்பு செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

அரசு துறை ஊரதிகளுக்கான தரமான பராமரிப்பு பணிகளை சிக்கனமான செலவில் திறம்பட அளிப்பதே மோட்டார் வாகனப் பராமரிப்பு நிறுவனம் உருவாக்கப்பட்டதன் முக்கிய நோக்கமாகும்.

அரசின் பலவேறு திட்டங்களில் பயன்படுத்தப்படும் அரசு துறை வாகனங்களை பழுது பார்ப்பதற்கும், பராமரிப்ப தற்கும் தனியார் பணிமனைகளை சார்ந்திருப்பதை தவிர்த்து, ஒவ்வொரு மாவட்ட. தலைநகரங்களிலும் நவீனமயமாக்கப் பட்ட புதிய இயந்திரங்கள் பொருத்தப்பட்ட அரசு தானியங்கிப் பணிமனையை நிறுவுவதே இறுதி நோக்கமாகும்.

புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொருத்தவரை அது தனி மாவட்டமான 1974 –ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை நிறைவேறவில்லை. இதை தமிழ்நாடு முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்

புதுக்கோட்டை காவல்துறைக்கு தேவை புதிய வாகனங்கள்..

காவல்துறையின் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, ஆயுதப் படை, அதிவிரைவுப்படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அதிரடி நடவடிக்கைகளுக்கு முக்கிய பின்புலமாக இருப்பவை அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள்தான்.

தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட காவல் துறைக்கு ரோந்து வாகனம், கண்ணீர் புகை கூண்டு வீசும் வாகனம், நீர்பீய்ச்சும் வாகனம், ஆயுதப் படை வாகனம் உள்பட மாவட்ட எஸ்பி தொடங்கி  ஆய்வாளர் வரை உள்ள அதிகாரிகளுக்கு வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒரு மாவட்டத்துக்கு ஏறத்தாழ 60 முதல் 80 வாகனங்கள் வரை இயங்கி வருகின்றன. இவற்றை அரசு தானியங்கி பணிமனை கள் மூலம் காவல் துறையினர் பராமரிப்பு மற்றும் உதிரிப் பாகங்களை மாற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின் றனர்.

புதுக்கோட்டை காவல் மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தங்கி, கீரனூர், பொன்னமராவதி, கோட்டைப் பட்டிணம் ஆகிய 6 உட்கோட்டங்களில் உள்ளன . இந்தக் கோட்டங்களின் ஆளுகைக்குள் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்பட 40 காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.

மாவட்ட காவல்துறைக்கு ரோந்து வாகனம், கண்ணீர் புகை கூண்டு வீச்சும் வாகனம், நீர்வீச்சும் வாகனம், ஆயுதப் படை வாகனம் உள்பட சுமார் 60 வாகனங்கள் இயங்கி வருகின்றன. இச்சூழ்நிலையில், சுமார் 70 சதவீத வாகனங்கள் அதன் இயக்க வயதைவிட  20  ஆண்டுகளைக் கடந்து இயங்கி வருகின்றன என்பது அதிர்ச்சியளிக்கிறது.

இதுபற்றி ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி கூறியதாவது:
15 முதல் 20  ஆண்டுகளைக் கடந்துவிட்ட காவல்துறை வாகனங்களை பழுது நீக்கம் செய்து இயக்குவது காவல்துறையினருக்கு மிகப் பெரிய சவாலாகவே இருந்து வருகிறது.

இதற்காக புதுக்கோட்டையிலிருந்து 50 கிமீ தொலைவிலுள்ள திருச்சிராப்பள்ளியில் உள்ள பணிமனைக்கு வாகனங்களைக் கொண்டு செல்ல வேண்டிய சிரமநிலை கடந்த 40 ஆண்டுக ளாக நீடித்து வருகிறது.

காரணமாக காவல்துறையினரின் அன்றாட மற்றும் அவசர கால பணிகளில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதும் தவிர்க்க முடியாத நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. புதிய வாகனங்கள் இருந்தால் இது போன்ற நிகழ்வுகள் தவிர்க்கப்படும்.

எனவே, தமிழக முதலமைச்சர், சட்டப்பேரவையில் நடை பெறும் காவல் துறைக்கான மானியக் கோரிக்கையின் போது புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக்கு புதிய வாகனங்க ளை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கி றோம் என்றார்.

புதுக்கோட்டை தனி மாவட்டமாகி   இதுவரை போக்குவரத்து ஆய்வாளர் என்ற பதவி கிடையாது..!

புதுக்கோட்டை மாவட்டம் 1974  உருவாகக்கப்பட்டது அப்போதிலிருந்து இதுவரையும் போக்குவரத்து பிரிவுகளான புதுக்கோட்டை நகர போக்குவரத்து காவல்துறையிலும் அறந்தாங்கி போக்குவரத்து காவல் துறையிலும் ஆய்வாளர் இல்லாதது பெருங்குறையாக உள்ளது,

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த இரண்டு இடங்களுமே மிகவும் முக்கியமான நகரங்கள். இங்கு புதிதாக இதற்கு ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். இந்த காவல்துறை மானிய கோரிக்கையில் முதலமைச்சர் நிறைவேற்றுவார்   என்கிற எதிர்பார்ப்பு மேலோங்கி  நிற்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top