Close
மே 20, 2024 3:15 மணி

அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்… புதுகை நகரில் சாலைகளில் சிரமத்துடன் சென்ற பொதுமக்கள்

புதுக்கோட்டை

வெயிலில் குழந்தைகளை காத்துச்சென்ற தாய்மார்கள்

இந்தியாவின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு கோடை வெயில் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம்  தகவல் வெளியிட்டுள்ளது.

மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலம். இந்த ஆண்டு இந்த காலக்கட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவு இருக்கும்.

இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு ராஜஸ்தான், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வழக்கமான வெப்பநிலை காணப்படும்.

வடகிழக்கு, மேற்கு, மத்திய இந்தியாவிலும் சில தென்பகுதி களிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். வழக்கமாக அடிக்கும் வெயிலைவிட கூடுதலாக ஒரு டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்.

தென்னிந்தியாவில் ஆந்திர கடலோர மாவட்டங்கள், தெலங்கானாவின் சில பகுதிகளில் வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கும். மற்ற பகுதிகளிலும் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்.

புதுக்கோட்டை
வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க உதவிய குடை

மார்ச் முதல் மே மாதம் வரை இந்த வெப்பம் நீடிக்கும். ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு பருவ மழை வழக்கம்போல் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே போல, தமிழ்நாட்டிலும் கோடை காலம் தொடங்கும் முன்னரே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெயில் அதிகரித்துவிட்டது. கோடை காலத்தில் வழக்கத்தைவிட அதிக வெப்பம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
புதுக்கோட்டை
வெயிலாவது மழையாவது… என்னை என்ன செய்யும் என்று செல்லும் முதியவர்

கேரளாவில் கடந்த மாதமே 33 டிகிரி செல்சியஸ் வெயில் அடிக்க தொடங்கியது. எனவே, கோடையில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில்,  புதுக்கோட்டை நகரில்  வெள்ளிக்கிழமை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால்   நகரின் பல்வேறு சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது.  எனினும் சாலைகளில் சென்ற பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்,

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top