Close
மே 20, 2024 12:57 மணி

புதுக்கோட்டை அரசு ஐடிஐ -ல் உலக மகளிர் தின விழா

புதுக்கோட்டை

சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பில் புதுகை அரசு ஐடிஐயில் நடந்த மகளிர் தினவிழாவில் பரிசளித்த ஏடிஎஸ்பி கீதா

புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் இணைந்து திருக்கோகர்ணம் தொழில்பயிற்சி நிலைய வளாகத்தில் நடத்திய சர்வதேச பெண்கள் தின விழாவுக்கு, சங்க தலைவர் மாருதி கண. மோகன்ராஜா தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில், நிலைய முதல்வர் எஸ். ராமர், சங்க துணை தலைவர் ஏஎம்எஸ். இப்ராஹிம் பாபு, நிர்வாக அலுவலர் எம். பார்வதி, சங்க பொருளாளர் சி. பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில் மாமன்னர் கல்லூரி வரலாற்று பேராசிரியர் (ஓய்வு)  எஸ். விஸ்வநாதன், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க மகளிர் அணி பொறுப்பாளர் மர்சியா மன்சூர்  ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி. கீதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவிகளுக்கு மேனாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் குறித்த கையேடு, பேனா மற்றும் முகக் கவசங்களை வழங்கினார்.

பின்னர் , கூடுதல்  காவல் கண்காணிப்பாளர் கீதா பேசியதாவது:  நமது நாட்டு விஷயங்களையும் உலக விஷயங்களையும் ஒவ்வொரு நாளும் தினசரி செய்தித்தாள்கள் மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவும் பெண்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அரசினர் தொழிற்பயிற்சி பெண் பயிற்சியாளர்களுக்கு எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலும் ஆற்றலும் உள்ளது. எனவே அனைவரும் தைரியமாகவும் துணிவுடன் வாழ வேண்டும். இன்றைய தலைமுறை நாளைய சமுதாயம் என்பதால் அதற்கு உறுதுணையாக இருக்கும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியையும் மகளிர் தின வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் உங்களால் இயன்ற உதவியைகஷ்டப்படுபவர்களுக்கு  செய்ய வேண்டும்.  பெண் குழந்தை பிறப்பதற்கு தாய் ஒரு போதும் காரணம் இல்லை. தந்தை மட்டுமே காரணம் என்பதே அறிவியல் ரீதியான உண்மை. நான் காவல்துறையில் காக்கி சீருடையை விரும்பி ஏற்றுக் கொண்டேன்.

என்னைப்போல் உங்களில் பலர் விரும்பி காக்கி சீருடையை  ஏற்றுக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் ஏடிஎஸ்பி கீதா. முன்னதாக  நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜோதிமணி வரவேற்றார்..நிறைவாக அலுவலக உதவியாளர் வினோலியாமணி நன்றி கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top