Close
செப்டம்பர் 20, 2024 6:34 காலை

மத்திய பாஜக அரசை அகற்றுவோம்… நாட்டை பாதுகாப்போம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரசார இயக்கம்

தஞ்சாவூர்

lஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் தெற்குமாவட்ட நிர்வாக குழு மற்றும் இடைச் செயலாளர்கள் கூட்டம்

மோடி ஆட்சியை அகற்றுவோம்,. நாட்டை பாதுகாப்போம் நாடு தழுவிய பிரசார இயக்கம் தஞ்சை தெற்கு மாவட்டத்தில் ஏழு ஒன்றியங்கள், இரண்டு நகரங்கள் உள்ளிட்ட 300 கிராமங்களில் பிரசார இயக்கம் நடத்துவதென  தஞ்சையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் தெற்கு மாவட்ட நிர்வாக குழு மற்றும் இடைச் செயலாளர்கள் கூட்டம் சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சோ. பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி நடைபெற்ற பணிகள் குறித்தும்,. மே 5 முதல் 10 -ஆம் தேதி வரை நடைபெறும் பிரசார இயக்கம் குறித்தும் விரிவாக பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் கோ. சக்திவேல், நிர்வாக குழு உறுப்பினர்கள் தி.திருநாவுக்கரசு, ம.விசயலட்சுமி, அ.கலியபெருமாள், ரெ.கோவிந்தராசு, வெ.சேவையா,இடைக்குழுசெயலாளர்கள்ஆர்.பி.கருப்பையா,  க.பூபேஷ் குப்தா, வாசு. இளையராஜா மு.பால்ராஜ், தஞ்சாவூர் மாநகர செயலாளர் ஆர்.பிரபாகர் மற்றும் குணசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பிஜேபி ஆட்சிக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் ஒன்றிய மோடி அரசாங்கம் தொழிலாளர்களுக்கு விரோதமாக போராடி பெற்ற நலச் சட்டங்களை சுருக்கி உள்ளது, விவசாயிகள் போராட்டத்தில் எழுதிக் கொடுத்த உறுதிமொழிகள் நிறைவேற்றப் படவில்லை.

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப் படவில்லை, சிறு,குறு தொழில்கள் நசுக்கப்பட்டுள்ளது, விலைவாசி உயர்வு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது, நாட்டின் வளங்கள், மக்களுக்கு சேவை செய்கின்ற பொதுத்துறை நிறுவனங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படுகின்றன, மத சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமியர்கள் தேச விரோதிகளாக சித்தரிக்கப்படு கின்றனர்.

கருத்துரிமை, எழுத்துரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன, எதிர்த்து பேசுபவர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப் படுகின்றனர் இந்த நிலைமைகளை கண்டித்தும், நாட்டில் ஜனநாயகத்தை. நிலை நாட்டிடவும், ஒன்றிய பாசிச, மதவெறி பிஜேபியிடம் இருந்து மக்களை மக்களையும், நாட்டையும் பாதுகாக்கவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மே ஐந்தாம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நாடு தழுவிய பிரசார இயக்கத்துக்கு அறைவல் விடுத்துள்ளது.

இந்த பிரசார இயக்கத்தை தஞ்சை தெற்கு மாவட்டத்தில் பேராவூரணி, சேதுபாசத்திரம் உள்ளிட்ட ஏழு ஒன்றியங்கள், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாநகரம் உள்ளிட்ட இரண்டு நகரங்கள், 300 கிராமங்களில் 126 குழுக்கள் பிரசார இயக்கத்தை நடத்துவது.

மே 5ம் தேதி தஞ்சையில் துவங்கும் பிரசார இயக்கத்தை மாவட்டச் செயலாளர் முத்து உத்தராபதி தொடங்கி வைப்பது என்றும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. தனியாருக்கு அதிகாரத்தை அளிக்கின்ற, நீர் நிலைகள் மற்றும் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் நில ஒருங்கிணைப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும்.

ஒன்றிய மோடி அரசாங்கம் தமிழ்நாடு அரசுக்கு அளித்து வந்த மண்ணெண்ணெய் அளவை 2712 கிலோ லிட்டராக குறைத்ததை கண்டித்தும் , ஏற்கெனவே வழங்கி வந்த மண்ணெண்ணய் அளவை வழங்கிட ஒன்றிய அரசை இக் கூட்டம் வலியுறுத்துகிறது.

தற்போதைய கோடை காலத்திலேயே ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள் உள்ளிட்ட நீர்நிலை ஆதாரங்களை கணக்கில் எடுத்து, அவற்றை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, தூர்வாரும் பணிகளை விரைவாக மேற்கொண்டு,. வரும் காலத்தில் தண்ணீரை சேமிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசை இக் கூட்டம் கேட்டுக் கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top