புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், இல்லம் தேடிக் கல்வி மையத்தில் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா தொடக்க விழா அக்கச்சிப்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் நடைபெற்றது .
இந்நிகழ்விற்கு வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி தலைமை வகித்தார்.அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ் செல்வி முன்னிலை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார்.
வட்டாரக் கல்வி அலுவலர் நரசிம்மன் தொடங்கி வைத்து பேசியதாவது: மாணவ, மாணவிகள் கோடைகாலத்தில் நடைபெறும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா சிறப்பாக நடைபெற இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்களுக்கு எளிய அறிவியல் சோதனை, என் கணித விளையாட்டுகள், அறிவியல் அற்புதங்கள் உள்ளூர், வளங்களை வரைபடம் ஆக்குதல், ஆடலும் பாடலும் கைத்திறனும் கற்பனையும் என்ற தலைப்பில் இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சி பெற்ற தன்னார்வலர்களும், வானவில் மன்றம் கருத்தாளர்களும் இணைந்து மாணவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவில் எளிய அறிவியல் பரிசோத னைகள் செய்து காண்பிப்பார்கள . அதை ஒவ்வொரு மாணவர்களும் பயன்படுத்தி அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அறிவியல் அடிப்படை அறிவை வளர்க்க செய்முறை மிகவும் முக்கியமானதும் கோடைகாலத்தில் நடைபெறும் அறிவியல் திருவிழாவை எளிய சோதனைகள் மூலம் ஒவ்வொரு மாணவர்களும் கற்றுக்கொண்டு அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் பேசினார்.
இல்லம் தேடிக் கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா ஒருங்கிணைத்தார். இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள் சுரேஷ் குமார், பாரதிதாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
வானவில் மன்ற கருத்தாளர்கள் தெய்வீக செல்வி ,வசந்தி மாணவர்களுக்கு ஒரிகாமி, அறிவியல் சோதனைகள் செய்து காண்பித்தார்கள். தன்னார்வலர்கள் நித்யா, ஹேமலதா, புவனேஸ்வரி, சுவேதா ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக தன்னார்வலர் மாலினி நன்றி கூறினார்.