Close
நவம்பர் 22, 2024 7:57 காலை

இலவச சிலம்பம், குத்து சண்டை பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

புதுக்கோட்டை

நேரு யுவகேந்திரா மாவட்ட குழந்தைகள் நல குழுமம் அலுவலர் மன்றம் புத்தாஸ் வீர கலைகள் மேம்பாட்டு கழகம் சார்பில் மாபெரும் இலவச சிலம்ப குத்து சண்டை பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய சட்ட அமைச்ச ரகுபதி

இலவச சிலம்பம் மற்றும் குத்துச்சண்டை பயிற்சி பெற்ற மாணவ மாணவியருக்கு அமைச்சர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்,

நேரு யுவ கேந்திரா புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம்,அலுவலர் மன்றம் மற்றும் புத்தாஸ் வீர கலைகள் கழகம்,ஆகியவை இணைந்து நடத்திய இலவச சிலம்பம் மற்றும் குத்துச்சண்டை பயிற்சி முகாம் கடந்த 30.4.2023 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு 08.5.2023 தேதி வரை நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமானது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த காவிரி நகர், திருக்கோகரணம், திலகர் திடல்,பழைய பேருந்து நிலையம் ,பெருங்குடி, கடியாபட்டி, தாஞ்சூர் ஆகிய ஏழு இடங்களில், 400 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், பயிற்சி பெற்றனர்.

இந்த பயிற்சி முகாமில் நிறைவு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் விழாவுக்கு, நேரு யுவ கேந்திராவின் உதவி திட்ட அலுவலர் நமச்சிவாயம் தலைமை வகித்தார். மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் தலைவர் எஸ்விஎஸ்.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.

விழாவின் சிறப்பு விருந்தினராக சட்டம் நீதிமன்றங்கள் சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டு பேசுகையில்,

புதுக்கோட்டை
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய ,சட்டம் நீதிமன்றங்கள் சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு துறை அமைச்சர் ரகுபதி.

தமிழக அரசு விளையாட்டுக்காக பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதில் மிக முக்கியமாக சிலம்பத்திற்கு தமிழ்நாடு முதல்வர் முக்கியத்துவம் கொடுத்து மூன்று சதவீத இட ஒதுக்கீடு கொடுத்துள்ளார். எனவே, அனைவரும் இந்த அரசு முக்கியத் துவம் கொடுக்கக்கூடிய விளையாட்டு துறையில் கவனம் செலுத்தி மென்மேலும் வளர வேண்டும் என மாணவச் செல்வங்களை வாழ்த்தி சான்றிதழ் வழங்கினார்,

இதில், புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில்,நகர்மன்ற துணைத் தலைவர் லியாகத் அலி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் மாருதி கண.
மோகன்ராஜ் ,அலுவலர்கள் மன்ற செயல் தலைவர்,மருத்துவர் ராமசாமி , திரைப்பட இயக்குனர் ஜெயகாந்தன்,மாவட்ட  குழந்தைகள் நலக் குழும உறுப்பினர் சுவாமிநாதன், ராசாப்பட்டி சமூக ஆர்வலர் வீரையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அலுவலர் என்ற செயலாளர் முனைவர் ரமேஷ்,அரிமளம் சமூக ஆர்வலர் ராமமூர்த்தி வாழ்த்துரை வழங்கினர்.

விழாவின் முன்னதாக புத்தாஸ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளையின் தலைவர் சேது. கார்த்திகேயன் வரவேற்றார். பொருளாளர் ஹரி கிருஷ்ணன் நன்றி கூறினார்.

இதில், பத்துக்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் 400 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரும், நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ,தங்கள் பெற்ற பயிற்சிக்கான சான்றிதழ்களோடு மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top