Close
செப்டம்பர் 20, 2024 7:06 காலை

மல்யுத்த வீராங்கனைகள் விவகாரம்: மத்திய பாஜக அரசைக் கண்டித்து ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி தொழில் சங்கத்தினர்

இந்திய மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் பலாத்காரம் செய்த பாஜக எம்.பி பிரிட்ஜ் பூசன் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி  ஏஐடியூசி  சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சையில் இன்று நடைபெற்றது.

சர்வதேச போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள் உள்ளிட்டு பல்வேறு போட்டிகளில் பதக்கங்கள் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த இந்திய மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக அகில இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிட்ஜ் பூசன் சரண்சிங் மீது பாலியல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு,நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் எஃப் ஐ ஆர் பதிவு செய்ய ப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர் மீது எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

அவரை கைது செய்ய வலியுறுத்தி டெல்லி தலைநகர் ஜந்தர் மந்தரில் இந்திய மல்யுத்த வீராங்கனைகளும், வீரர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை டெல்லி காவல்துறை கடுமையாக தாக்கி போராட்டத்தை கைவிட பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. செய்திகள் சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டுள் ளனர்.

ஜனநாயக அமைப்புகள், இடதுசாரி அமைப்புகள் வீராங்க னைகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிட்ஜ் பூசன் சரண்சிங் கை கைது செய்ய வலியுறுத்தியும், வீராங்கனைகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் ஏஐடியுசி தேசிய தொழிற்சங்கம் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது.

இந்த அறைகூவலை ஏற்று தஞ்சை மாவட்ட ஏஐடியுசி சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று 9. 5. 2023 காலை 10.30 மணிக்கு தஞ்சை பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி மாநிலச் செயலாளர் ஆர்.தில்லைவனம் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன், விதொச மூத்த தலைவர் ஜி.கிருஷ்ணன், மின்வாரிய சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேல், டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கோடீஸ்வரன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை, கட்டுமான சங்க மாவட்டத் துணைத் தலைவர்கள் பி.செல்வம், சிகப்பியம்மாள், ஆசிரியர் ஓய்வு சுந்தரமூர்த்தி, சமூக ஆர்வலர் ஆலம்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top