Close
செப்டம்பர் 20, 2024 3:48 காலை

புத்தகம் அறிவோம்… கஸ்தூர்பாகாந்தி பற்றி..

புத்தகம் அறிவோம்

கஸ்தூர்பா காந்தி குறித்த புத்தகம்

கஸ்தூர்பா காந்தியைப் பற்றிய தமிழ் நூல்களில் சிறப்பானது இது. இந்நூலாசிரியர் மைதிலி சிவராமன் ஒரு சமூகப் போராளி, பொது வுடைமை சிந்தனையாளர், அகில இந்திய மாதர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து பல போராட்டங்களுக்கு தலைமையேற்றவர்.

ஒரு பெண்ணியவாதியின் பார்வையில் இந்நூல் வரையப் பட்டுள்ளது. பாரதி புத்தகாலயம் வெளியிட்ட இந்த 64 பக்க நூலின் வழி கஸ்தூர்பாவின் முழு பரிமானங்களையும் அறியமுடிகிறது. கஸ்தூர்பாவின் வாழ்க்கையை காந்தியின் வாழ்க்கையோடு இணைத்து எழுதப்பட்டுள்ளது இந்த நூல்.

கஸ்தூர்பாவின் 65 ஆண்டுகால குடும்ப வாழ்க்கை, காந்தி யினுடைய போராட்டங்களில் பங்கேற்றது, தனிமைச் சிறை உட்பட அவரது சிறைவாழ்க்கை என்று அனைத்தையும் சிறப்பாக எழுதியுள்ளார்.

இந்த நூலுக்கு ஆதாரமாக இருந்தது சமீபத்தில் மறைந்த காந்தியின் பேரன் (மணிலால் மகன்)அருண் காந்தி எழுதிய Kasturba a life என்ற புத்தகம். இந்த நூல் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள விரிவான நூல் அதிலிருந்து பல செய்திகளை மைதிலி அவர் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

“கஸ்தூர்பா ஓர் அசாதாரமான பெண்மணி. எதையும் மன்னிக்கும் குணமுடைய அவர், மிகத்தைரியமானவர். நம்பமுடியாத அளவுக்கு விசுவாச குணமுடையவர். காந்தியின் விஷ்வாசமுடைய சிஷ்யை மட்டும் அல்ல அவரை கூர்மையாக விமர்சிக்கும் செல்வாக்குடைய விமர்சகரும்கூட.

கஸ்தூர்பா வரலாற்றில் அடிக்குறிப்பு மட்டும் அல்ல.” சொன்னது காந்தியைப் பற்றி படம் எடுத்த ஆட்டன்பரோ.
“சொர்க்கத்தில் மகான் கலோடு வாழ்வது பேரின்பமும் மகிமையுமாகும்.ஆனால்,  இப்புவியில் ஒரு மகானோடு வாழ்வதோ? அது வேறு விஷயம். சொன்னது காந்தியின் அன்பிற்குரிய செயலாளர் மகாதேவ தேசாய்.

தங்கள் துணைவர்கள் பெரும் தலைவர் ஆவதற்கு வழி செய்யும் வகையில் தன்னலமற்று சுய தியாகம் செய்துகொள்ளும் எல்லா பெயர் தெரியாத பெண்களுக்கு இந்நூல் அர்ப்பணம்” என்ற அருண் காந்தியின் வாசகத்தை மைதிலி சிவராமனும் இந்த நூலை அவர் யாருக்கு அர்ப்பணிக்கிறார் என்று சொல்வதற்கு பயன்படுத்தியுள்ளார்.

—-பேராசிரியர் விஸ்வநாதன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top