Close
நவம்பர் 24, 2024 9:05 மணி

புத்தகம் அறிவோம்.. உலகின் சிறந்த இலக்கியம் மாக்சீம் கார்க்கி எழுதிய “தாய்” நாவவ்

உலக அன்னையர் தினம்

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல்

உலகில் பெண்ணாகப் பிறந்த அனைவருமே அன்னையர்தான் அனைவருக்கும்  அன்னையர் தின வாழ்த்துகள்.

ஒவ்வொரு ஆண்டும் மே மாத 2 -ஆவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மாக்சீம் கார்க்கியின் ” தாய் “உலகின் சிறந்த இலக்கியமாகக் கருதப்படுகிறது.

இந்நாவலின் உயிர் “பெல் கேயா நீலவ்னா, ” படிக்காதவள், உலகம் அறியாதவள். தொழிலாளியின் மனைவி. குடிப்பழக் கத்துக்கு ஆட்பட்ட கணவனால் நிறைய அடிவாங்கி அவதிப்படுகிறவள் . இவளே பிற்காலத்தில் புரட்சிப் புயலான ‘தாய்’ ஆகிறாள்.

ரஷ்ய மொழியில் 200 க்கு மேற்பட்ட பதிப்புகளும், 127 வேற்று மொழிகளில் 100 -க்கு மேல்பட்ட  பதிப்புகளும் கண்டது. தமிழில் முதல் பொதுவுடைமை நாவலாகக் கருதப்படுகிற “பஞ்சும் பசியும்” நாவலை எழுதிய தொ.மு.சி.ரகுநாதன் இந்தத் தாயை தமிழில் நமக்குத் தந்திருக்கிறார். NCBH வெளியீடு.

>>>பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர்பேரவை>>>

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top