தேசத்தின் வளர்ச்சிக்கு தனிமனித ஒழுக்கம் மிக முக்கியமானது என்று கருதியவர் மகாத்மாகாந்தி. அப்படி தனிமனிதனை நெறிப்படுத்துவதற்காக காந்தி சொன்ன 11 மகாவிரதங்கள்.
1.சத்தியம்
2.அஹிம்சை அல்லது அன்பு
3.பிரமச்சர்யம்
4.நாக்கை அடக்கல்
5. திருடாமை
6. எளிய வாழ்க்கை
7. பயமின்மை
8. தீண்டாமை விலக்கு
9. உடல் உழைப்பு
10.தாராள புத்தி
11.சகிப்புத் தன்மை.
பணக்காரர்களிடம் ஏராளமான பொருள்கள் தேவைக்கு மிஞ்சிக் கிடக்கின்றன.அவைகள் வீணாகின்றன. அதே சமயத்தில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வுக்கு அவசியமான பொருள்களின்றி பட்டினி கிடந்து சாகின்றனர்.
ஒவ்வொரு மனிதரும் அவரவருக்கு வேண்டியதை மட்டும் வைத்துக்கொண்டிருப்பாராயின், உலகத்தில் ஒருவருக்காவது தேவையென்பது இருக்காது. யாவரும் திருப்தியோடு வசிப்பார்கள் என்கிறார் எளிய வாழ்க்கை விரதத்தில்.உலகில் தீண்டத்தகாதவர் என்று எவருமேயில்லை… மனித ஜென்மமெடுத்த எவரையும் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைப்பது தவறு.
வெறுமனே ஒரு ஹரிஜனை நண்பரென்று ஏற்றுக் கொள்வதோடு இந்த நியமனம் பூர்த்தியாகிவிடாது. ஒவ்வொரு ஜீவனையும் நமது சகோதரராக பாவிப்பதுதான் இந்த நியமத்தின் லட்சணம். தீண்டாமை விலக்கு என்றால் உலகோர் அனைவருக்கும் சேவை செய்வதென்றே அர்த்தம் என்கிறார் காந்தி. இந்த நூல் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் கிடைக்கும்.
மகாத்மாவின் இளைஞர்களுனக்கான 9 தினசரி கடமைகள்.
1. மிதமாகப் பேசு.
2. எவர் எது சொன்னாலும் கேட்டு, சரியென்று தோன்றுவதைச் செய்.
3. ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் வேலை செய்.
4. ஏழைபோல் வாழ்; செல்வத்தில் பெருமை கொள்ளாதே.
5. நீ செய்யும் செலவிற்கு கணக்கெழுது.
6. மனம் ஒன்றி கல்வி கற்றுக்கொள்.
7. நாள்தோறும் உடற்பயிற்சி செய்.
8. நாள் தவறாமல் நாட்குறிப்பெழுது.
… பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர் பேரவை…