Close
நவம்பர் 22, 2024 1:20 காலை

புத்தகம் அறிவோம்… ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு” என்ற இந்த நூல், நீண்ட அனுபவம் கொண்ட பத்திரிக்கையாளர் பாவை சந்திரன், தினமணியில் 178 நாட்கள் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு.

ஈழத்தமிழர்களின் பிரச்னையைப் பற்றி தமிழில் இப்படி யொரு இதுவரை வந்ததில்லை. சிங்களர் யார் என்பது தொடங்கி, 2007 ஆண்டு வரையிலான ஈழத்தமிழர் பிரச்சினையை தகுந்த ஆதாரங்களோடு அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது.

1948 இலங்கை சுதந்திரமடைதலில் தொடங்கி, இலங்கையில் தொடங்கிய அரசியல் மாற்றங்கள், ஆட்சியில் இருந்த குடியரசு தலைவர்கள் , பிரதம மந்திரிகள் – ஈழத்தமிழர் தொடர்பான இவர்களின் அணுகுமுறைகள், அமைதிப் போராட்டம் ஆயுதம் தாங்கிய போராட்டமானது.

தமிழகத் தலைவர்களின் நிலைப்பாடுகள், இந்திய அரசு ஈழப்பிரச்சினையைக் கையாண்ட விதம், ராஜிவ் காந்தி படுகொலை, போராட்டக்குழுக்களுக் கிடையேயான மோதல் என்று அனைத்தையும் சித்திரமாக்கியிருக்கிறார் பாவை சந்திரன்.

இதற்கு பழ.நெடுமாறன் அணிந்துரை தந்திருக்கிறார்.  நூலின் பிற் பகுதியில் கி.பி.1505 தொடங்கி 2007 வரையிலான நிகழ்வுகளின் காலவரிசை சிறப்பாகத் தரப்பட்டுள்ளது.1374 பக்கங்களைக் கொண்ட இந்நூலை வாசிக்கத் தொடங்கினால் அதிலே ஒன்றிப் போகின்ற அளவிற்கு உணர்வு பூர்வமான எழுத்து நடை மிகவும் பாராட்டுக்குரியது. வெளியீடு: கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ். 9840058282.

..பேராசிரியர் விஸ்வநாதன்- வாசகர் பேரவை..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top