தமிழகத்தில் திருவிழாக்களுக்கு பஞ்சமில்லை. கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்களைத் தவிர மற்றவர்கள் யாவரும் ஏதேனும் ஒரு விழாவை கொண்டாடத்தான் செய்கிறார்கள்.
அதேபோல காந்தி தேச விடுதலைக்காக விரமிருந்தார் என்றால் இங்கே பலரும் கடவுளின் அருள் வேண்டி, வேண்டியதை அடைய வேண்டி விரதம் இருப்பதைப் பார்க்கிறோம். இந்த விரதம் இருப்பது எல்லா சமயத்தவர் களிடமும் உண்டு.இந்துக்கள் விரதம் இருந்து பழனி யாத்திரை என்றால் கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணிக்கு .
“தென்னிந்திய திருவிழாக்கள்” என்றஜெகதீச அய்யர் அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்த நூல் தென் னிந்தியாவில் உள்ள இந்துக்கள் கொண்டாடும் விழாக்களைப் பற்றியது. மார்கழி கடைசியில் கொண்டாடப்படும் போகிப்பண்டிகை தொடங்கி இறுதியாக மார்கழியில் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி வரை, ஒவ்வொரு மாதமும் கொண்டா டப்படும் திருவிழாக்களை பற்றி, – விழாப் பெயர், கொண்டாடப்படும் நாள், கொண்டாடப்பட வேண்டிய முறை, விழாவின் முக்கியத்துவம் வரை எழுதப்பட்டுள்ளது. சங்கராந்தி,
மாட்டுப்பொங்கல்,
தைப்பூசம்,
மாசி மகம்
மகாசிவராத்திரி,
ராம நவமி,
பங்குனி உத்திரம்,
சித்ரா பெளர்ணமி,
வைகாசி விசாகம்,
ஆடிப்பூரம்,
ஆவணி மூலம்,
காயத்ரி ஜபம்
கிருஷ்ண ஜெயந்தி,
விநாயகர் சதுர்த்தி,
நவராத்திரி,
தீபாவளி
கார்த்திகை விரதம்
வைகுண்ட ஏகாதசி என்று 27 விழாக்களைப் பற்றிய விவரங்கள் இந்த நூலில் தரப்பட்டுள்ளது.இதைத்தவிர பின் இணைப்பில், தெலுங்கு வருடப்பிறப்பு தொடங்கி, ஹோலிப் பண்டிகை வரை 32 பண்டிகைகளைப் பற்றிய அறிமுகமும் தரப்பட்டுள்ளது. இந்த நூலின் மூலம் நாம் கொண்டாடும் விழாக்களின் தாத்பரியத்தை அறிந்து கொள்ளலாம். சந்தியா பதிப்பகம்-044-24896979.
..பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர் பேரவை..