Close
நவம்பர் 22, 2024 12:11 காலை

தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் வென்ற மாணவருக்கு பாராட்டு..

புதுக்கோட்டை

அக்கச்சிப்பட்டியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்.. தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தேர்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

.கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவி இலக்கியா தலைமை வகித்தார். துணைத் தலைவி வேதநாயகி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வி அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி கலந்து கொண்டு பள்ளி மேலாண்மை குழு செயல்பாடுகள் குறித்து பேசினார்.  கல்வியாளர் மருத்துவர் சுவாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன், ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ்குமார், ஆகியோர் கலந்து கொண்டு உரையாடினர்.

இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா இல்லம் தேடிக் கல்வி மையத்தில் நடைபெறும் கற்றல், கற்பித்தல் முறைகளை எடுத்து கூறினார்.

இதைத்தொடர்ந்து, பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர் சேர்க்கை, மாணவர் சேர்க்கை அதிகரிப்பது.

மாவட்ட அளவில் அனைத்து வகையாக சிறப்பாக செயல்படும் பள்ளி மேலாண்மை குழுவிற்கு சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியரால்  சிறந்த பள்ளி மேலாண்மை குழு விருது குறித்தும், மாணவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள இல்லம் தேடி கல்வி மையத்திற்குச் சென்று கற்றல் செயல்பாடுகளில் பங்கேற்பதின் அவசியம் குறித்தும். குழந்தைகள் இல்லம் தேடி கல்வி வகுப்புகளில் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

முந்தைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஒவ்வொன்றாக வாசித்து அதன் தற்போதைய நிலை, முன்னேற்றம், சவால்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தேர்வில் வெற்றி பெற்ற லோகேஸ்வரன் என்ற மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது .

கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் குழு உறுப்பினர்கள் அனைவரும் பள்ளி வளாகம் ,வகுப்பறை, கழிவறை ,குடிநீர் வசதிகள், சமையலறை, சமையல் பொருட்கள், நூலகம் விளையாட்டு மைதானம் ஆகியவற்றை பார்வையிட்டனர். உறுப்பினர்களின் வருகையை கைபேசி செயலியில் பதிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளார் அச்சுதன், வார்டு உறுப்பினர் கலா ராணி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மணிமேகலை, நிவின், சிந்தியா தற்காலிக ஆசிரியர்கள் தனலெட்சுமி,கெளரி ஆகியோர் கலந்து கொண்டனர்.  நிறைவாக ஆசிரியர் வெள்ளைச்சாமி  நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top