Close
மே 18, 2024 4:41 காலை

ஆதிதிராவிடர், பெண் ஊராட்சிமன்றத் தலைவர்களுக்கான காலாண்டு கூட்டம்

புதுக்கோட்டை

ஆதிதிராவிடர் - பெண் ஊராட்சித் தலைவர்களுக்கான காலாண்டு கூட்டத்தில் பேசிய ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பெண் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான இரண்டாவது காலாண்டு கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பெண் ஊராட்சி மன்றத் தலைவர் களுக்கான இரண்டாவது காலாண்டுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா  தலைமையில் (23.06.2023) நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: அரசின் செயல்பாடுகள் வெளிப்படை தன்மையுடனும், பொதுமக்க ளின் பங்களிப்புடனும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் ஜனவரி-26 குடியரசு தினம், மார்ச்-22 உலக தண்ணீர் தினம், மே-1 உழைப்பாளர் தினம், ஆகஸ்டு-15 சுதந்திரதினம், அக்டோபர்-2 காந்தி ஜெயந்தி, நவம்பர்-1 உள்ளாட்சி தினம் என ஆண்டுக்கு ஆறு முறை கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

ஊராட்சிகளுக்கு ஒன்றிய அரசு, மாநில அரசு மற்றும் கிராம ஊராட்சி நிதி மூலம் பெறப்படும் நிதிகளின் வரவு செலவி னங்கள் பொதுமக்கள் அறியும் வகையில் வெளிப் படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். வரவு செலவு பற்றி அறிந்து கொள்வதற்கு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதில் அரசிடமிருந்து பெறப்பட்ட நிதி எவ்வளவு அதனை எந்த திட்டத்திற்கு செலவு செய்யப்பட்டது என்பதை பொது மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்.

மேலும் கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகள் ஆரோக்கிய மாக வளர்வதற்காக அங்கன்வாடி பணியாளர்கள் மூலமாக மேற்கொள்ளப்படும் குழந்தைகளின் வயதிற்கேட்ப உயரம், எடை உள்ளனவா என்பது குறித்த கணக்கெடுப்பில் அனைத்து குழந்தைகளையும் பங்கேற்க செய்ய வேண்டும்.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்ட  காலை உணவுத் திட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1,326 பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் குழந்தைகளின் ஆரம்ப காலத்திலேயே அவர்களுக்குத் தேவையான சரிவிகித உணவு கிடைக்கப் பெறுவதற்கு வாய்ப்பாக அமையும்.

தமிழக அரசு தமிழகத்தின் பசுமை பரப்பினை 33 சதவீதமாக உயர்த்திடும் நோக்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மரக்கன்றுகள் அதிக அளவில் நடப்பட உள்ளன.

இத்திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமங்களில் நடைபெறும் கிராமசபை கூட்டங்கள் வாயிலாக இத்திட்டத்தின் பயன்பாடுகள் குறித்து ஊராட்சிமன்றத் தலைவர்கள் எடுத்துரைக்க வேண்டும்.

மேலும் பொதுமக்களுக்கு டயாலிசிஸ் உள்ளிட்ட மருத்துவத் தேவைகளை அரசு மருத்துவமனைகள் வாயிலாக பூர்த்தி செய்துகொள்ள பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும்.

தமிழக அரசின் திட்டங்களை முழுமையாக பொதுமக்களிடம் கொண்டு சென்று அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் சிறந்த நிர்வாகத்தை அளிக்க அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  நா.கவிதப்பிரியா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆர்.ரவிச்சந்திரன் மற்றும் ஊராட்சிமன்றத் தலைவர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top