Close
நவம்பர் 22, 2024 12:22 மணி

தஞ்சை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள்: 390 பேர் கோரிக்கை மனு அளிப்பு

தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டஆட்சியர்  தீபக் ஜேக்கப்  (26.06.2023) தலைமை வகித்து பேசியதாவது:

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா,முதியோர் உதவித்தொகை,குடும்ப அட்டை,பட்டா மாற்றம், கல்விகடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 390 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும்,மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் மாவட்டஆட்சியர்  தீபக் ஜேக்கப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, கவின்மிகுத ஞ்சை இயக்கம்,அரசினர் மேல்நிலைப்பள்ளி திருமங்கலமக்கோட்டை, கிழையூர், அறகானூயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை முனைவர் சதீஷ்குமார் ஆகியோருக்கு 2022-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருது மற்றும் தலா ரூ 1,00,000- க்கான காசோலையும், மாவட்ட சமூகநலத் துறை சார்பில் முதியோர்கள் நலன் பாதுகாப்பில் இளைய சமுதாயத்தினரின் பங்குஎன்ற தலைப்பில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)  எச்.எஸ்.ஸ்ரீகாந்த் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top