புதுக்கோட்டை அருகே தென்னங்குடியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஸ்ரீ விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் விழாவிமரிசையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை அருகே தென்னங்குடி கிராமத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் ஸ்ரீ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் புனித ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீர் குடத்தினை வைத்து மூன்று நாட்களாக சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து இன்று யானை மற்றும் குதிரைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் தீபா ஆராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாகசாலையில் மூன்று நாட்களாக பூஜிக்கப்பட்ட புனித நீர் குடத்தினை சிவாச்சாரியார்கள் சுமந்து மேளதாளங்கள் முழங்க கோவிலை சுற்றி வந்து கோபுரத்தில் உள்ள கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
பின்னர் தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்தை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.