Close
நவம்பர் 22, 2024 12:43 மணி

ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

தொழிற்சங்கங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தப்படி ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்சார வாரிய ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

தொழிற்சங்கங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தப்படி ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்சார வாரிய ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் புதுக்கோட்டை திட்டத் தலைவர் எஸ்.சித்தையன் தலைமை வகித்தார்.

கோரிக்கைகளை விளக்கி திட்டச் செயலாளர் கு.நடராஜன், சிஐடியு மாவட்டத் தலைவர் க.முகமதலிஜின்னா, பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர். அறந்தாங்கி கோட்டச் செயலாளர் டி.விஜயகுமார் நன்றி கூறினார்.

தொழிற் சங்கங்களுடன் மின்வாரியம் 22.2.2023 அன்று போடப்பட்ட ஒப்பந்தப்படி 6.1.1995 முதல் இன்று வரை பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.  கே 2 அக்ரிமெண்ட நடைமுறையை ரத்துசெய்து பழைய சிட் அக்ரிமெண்ட முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top