Close
நவம்பர் 22, 2024 6:02 காலை

தஞ்சையில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் ஆய்வு

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்த ஆட்சியர் தீபக் ஜேக்கப்

எதிர்வரும் 2024 ஆம்ஆண்டில் நடைபெறவுள்ள  மக்களவைத் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல்நிலை சரிபார்ப்பு பணி நடைபெறவுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கிணங்க, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு ஒதுக்கப் பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு சீட்டு தணிக்கை இயந்திரங்க ளுக்கான (VVPATs) முதற்கட்ட சரிபார்ப்பு (First Level Checking – FLC)  பணி பெங்களுரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Ltd) நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்களால் எதிர்வரும் 04.07.2023 (செவ்வாய்கிழமை) முதல் 10.08.2023 (வியாழக்கிழமை)  வரை  அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்டதேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியர கத்தில் அமையப்பெற்றுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கிடங்கில்உள்ள FLC அறையில் 2024 -ஆம் ஆண்டிற் கான நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக் கான முதற்கட்ட சரிபார்ப்பு (First Level Checking – FLC) பணிநடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top