Close
மே 11, 2024 4:17 மணி

புத்தகம் அறிவோம்… மாணவர்களுக்கு வள்ளுவர்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது கல்வியே. கல்வியைவிடச் சிறந்த செல்வம் வேறு இல்லை என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட உண்மை. ஓர் அரசனுக்கு அவனுடைய நாட்டில்தான் சிறப்பும் பெருமையும் உண்டு.

ஆனால் கல்வி அறிவு பெற்றவனுக்கோ உலகத்தின் எந்த இடத்திற்குச் சென்றாலும் அரசனை விட உயர்ந்த சிறப்பும் பெருமையும் உண்டு. நிலையான கல்வியறிவைப் பெற்ற சான்றோர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்கிக்
கொண்டிருக்கிறதென்றால் அது மிகையாகாது.

இவ்வளவு சிறப்புகளைப் பெற்ற கல்வியைப் பற்றியும், கற்றறிந்தவர்களைப் பற்றியும் வள்ளுவர் கூறும் கருத்து களைக் கேட்போமா?கற்க வேண்டிய நூல்களைத் தெளிவாகக் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்பு கற்ற கல்விக்குத் தக்கபடி நல்வழியில் வாழ வேண்டும். பக்.72-73.

25.8.2023 அன்று புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற தேசிய நூலகர் தின விழாவில் கலந்துகொண்ட வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கு அதன் தலைவர் கவிஞர் தங்கம் மூத்தி, இந்த, “மாணவர்களுக்கு வள்ளுவர்” நூலை அன்பளிப்பாக வழங்கினார்.

இந்த நூலை வாசித்தபோது (முழுமையாக இன்னும் வாசிக்கவில்லை), திருக்குறளை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு புதிய, நல்ல முயற்சியாகத் தெரிந்தது.

பதிவின் முற்பகுதியில் இருப்பது போல் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் ஒரு முன்னுரை – (அதிகாரத்தின் 10 குறள்களின் சாரம்) தந்துவிட்டு, பின்னர் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் எளிய நடையில் 10 குறள்களின் பொருளைத் தந்துள்ளார்.

இந்த உரைகள்” எளிமை, இனிமை, ஆளம் உடைமை என்ற மூன்று இயல்புகளையும் ஒருங்கே பெற்று, அதிகாரக் குறட்பாக்களின் உயிர்ப்பொருளை உணர்ந்து சிந்திக்கத் தூண்டுவன “என்று இந்த நூலுக்கு அணிந்துரை எழுதிய பேராசிரியர் அருள்நிதி இராம. இருசுப்பிள்ளை குறிப்பிடுகிறார்.

ஆசிரியர் வீரண்ணன் அறத்துப்பால், பொருட்பாலில் உள்ள 108 அதிகாரங்களில் உள்ள 1080 குறள்களையும் மேற்கண்ட முறையில் அறிமுகம் செய்கிறார்.இந்த நூலின் ஒரு இடத்தில் கூட (மூலக்)குறள் தரப்படவில்லை. குறளுக்கான உரை மட்டுமே உள்ளது. இது திருக்குறளின் ‘உரைநடை வடிவம்’.
குறளை வாசிக்கத் தூண்டும் உரை வடிவம்.

ஆசிரியர் வீரண்ணன் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பேராசிரியராகப் பணியாற்றியவர். ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் நல் புலமை பெற்றவர்.கோவையில் புகழ்பெற்ற பதிப்பகமான விஜயா பதிப்பகம் இந்த நூலை வெளியிட் டுள்ளது.மாணவர்களுக்கு பரிசளிக்க அருமையான நூல்.விஜயா பதிப்பகம்-0422 – 2382614/2385614.விலை ரூ. 100/.

# சா. விஸ்வநாதன், வாசகர் பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top