Close
நவம்பர் 22, 2024 12:18 மணி

திருவொற்றியூர் மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு

சென்னை

திருவொற்றியூர் மண்டலம் 4வது வார்டில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர்கள் மழைநீர் கால்வாய் பணிகளை ஆய்வு செய்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4வது வார்டில் மாநகராட்சி ஆணையர்  ஜெ. ராதாகிருஷ்ணன் மழைநீர் கால்வாய் பணிகளை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து திருவொற்றியூர் மண்டலம் நான்காவது வார்டு ஜோதிநகர் சடையங்குப்பம் இனைப்புச் சாலையில் கட்டப் பட்டிருந்த மழைநீர் கால்வாயை பார்வை யிட்டார். ஜோதிநகரில் இருந்து மணலி எக்ஸ்பிரஸ் சாலையில் ரெடிமேட் ப்ரிகாஸ்ட் மூலமாக ஓருநாளில் அமைக்கப் பட்டது.

எனினும் கடந்த 3 மாதமாக பணி முழுமையாக முடிக்கப் படாமல் இருந்தது. அங்கிருந்து பக்கிங்காம் கால்வாயை அடையும் வரையிலான பணியில் சுமார் 80 மீட்டர் பணி முடிக்கப்படாமல் உள்ளது.

இத்திட்டத்திற்கான மதிப்பீடு சுமார் 12 கோடி 4வது வார்டில் நடைபெறும் மொத்த கால்வாய் பணிகள் 48 கோடி ஆகும். இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார். பணிகள் குறித்து வட்டார துணை ஆணையர் (வக்கு) திரு. சிவகுருநாதன் ஆணையருக்கு விளக்கினார்.

இந்நிகழ்ச்சியில் மண்டலத்தலைவர்  திமு தனியரசு, மண்டல அலுவலர்நவிந்திரன், மாமன்ற உறுப்பினர் ஜெயராமன், செயற் பொறியாளர் தணிகைவேல் உதவி செயற்பொறியாளர் .ஜெயக்குமார். தரமேம்பாட்டு அலுவலர் நெல்சன் உட்பட பலர் பங்கேற்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top