Close
மே 20, 2024 10:07 காலை

திருவொற்றியூரில் சிறுவர்களுக்கான பேட்மிட்டன் போட்டி

சென்னை

திருவொற்றியூரில் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு இடையில் நடைபெற்ற பேட்மிட்டன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டன

சென்னை திருவெற்றியூரில் நடைபெற்ற சிறுவர்களுக்கான பேட்மிட்டன் போட்டியில் 30 -க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர்

திருவொற்றியூரில் ஸ்மார்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற பயிற்சி மையம் பத்தாவது ஆண்டாக ராசிக்கோப்பை என்ற பெயரில் பேட்மிட்டன் போட்டிகளை நடத்தி வருகிறது.

15 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவியர்கள் இப் போட்டியில் கலந்து கொண்டனர். கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற போட்டியில் 30க்கும் மேற்பட்ட அணிகள் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரியில் இருந்து கலந்து கொண்டனர்.

அதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு .வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசுகளும் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் ஸ்மார்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் ஆர். நேரு ராமசாமி, தொழிலதிபர் ஆர். சீனிவாசன், விமல் தாஸ், ஈஸ்வரிமுருகேசன், பி. ஆர். சந்திரன்,

டி..வி.முருகன், வி.மகேந்திரகுமார், ஏ.விநாயகம் முன்னாள் பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனை மரியா அலைஸ் டோல்,  வழக்கறிஞர்கள் ஜி. கே. ரங்கநாதன், எஸ்.எம்.டி. ரவிச்சந்திரன், கேஷன் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top