புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் ஆறாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6 வரை 10 நாட்கள் நகர்மன்றத்தில் நடக்கிறது இதற்கான மூன்றாவது வரவேற்பு குழு கூட்டம் புதுக்கோட்டை அறிவியல் இயக்க மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ம.வீரமுத்து தலைமையில் நடைபெற்றது. இதில் அனைவரையும் மாவட்ட செயலாளர் மு.முத்துக்குமார் வரவேற்றார்.
பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் :
புத்தக திருவிழா பள்ளி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகளில் போட்டிகள் பேச்சு கட்டுரை கவிதை எழுதுதல் வீட்ட போட்டிகள் ஒன்றிய அளவில் 17.7.2023 அன்றும், மாவட்ட அளவில் 19.7.2023 அன்றும் நடைபெறவுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் புலவர் கு.மா.திருப்பதி பள்ளி போட்டிகள் குறித்து பேசினார்.
கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள்:
கல்லூரி மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விஸ்வநாதன் கல்லூரி மாணவர்களுக்கு 22.7.2023 அன்று புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் நடத்தப்படவிருக்கும் போட்டிகள் குறித்து பேசினார்.
மாலை நேர மேடை கலை நிகழ்ச்சி:
ஒவ்வொறு நாளும் மாலை வேளைகளில் நடைபெறவுள்ள கலை நிகழ்ச்சிகள் குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் மா.குமரேசன் பேசினார்.
நடைபெற்றுள்ள வேலைகள்:
புத்தகத் திருவிழாவை ஒட்டி புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க அனைத்து ஒன்றியங்களிலும் புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியதைப் போல, ஒன்றிய அளவில் 24.7.2023 அன்று மாணவர்கள் பொதுமக்களை கொண்டு புத்தகத் ஊர்வலம் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து கடைக்கோடி கிராமங்கள் வரை கொண்டுசெல்ல நாம் செய்யவேண்டிய பிரச்சார பணிகள் குறித்தும் நடைபெற்றுள்ள வேலைகள் குறித்தும் புத்தகத் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் அ.மணவாளன் பேசினார்.
நிறைவாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.சுவாமி நாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி இரா.ராஜ்குமார் பேசும்போது: புத்தகத் திருவிழா பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு அதிக பங்கேற்பையும், அதிக விற்பனையையும் அனைத்துப் பள்ளி மாணவர்களையும் குடும்பத்தோடு கலந்து கொண்டு புத்தகங்கள் வாங்க ஊக்குவிக்க வேண்டும். அதற்கு தேவையான போக்குவரத்து வசதிகளை செய்து தர வேண்டும். இதை சிறப்பாக அறிவியல் இயக்க ஒன்றிய நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்களோடு ஒருங்கிணைத்து வழிநடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதில் இயற்கை விவசாயி ஜி.எஸ்.தனபதி, ஒருங்கிணைப் பாளர்கள் கவிஞர் கீதா, நாகராஜ், தலைமை ஆசிரியர் குருமூர்த்தி, ஒன்றிய நிர்வாகிகள் கரம்பக்குடி சாமியப்பன், சிவானந்தம் குன்னான்டார்கோயில் வடிவேல், ஜெயராம் கந்தர்வகோட்டை எழுத்தாளர் அண்டனூர் சுரா, திருவரங்குளம் எஸ்.ஏ.கருப்பையா, ராஜா, புதுக்கோட்டை சபரிகிருஷ்ணன், கார்த்திகேயன் அன்னவாசல் கஸ்தூரிரங்கன், பிரகதாம்பாள், மீனாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிறைவாக கவிஞர் புதுகை புதல்வன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.