Close
நவம்பர் 25, 2024 1:04 காலை

மாநகராட்சி சார்பில் திருவொற்றியூரில் ரூ.8 கோடி செலவில் ஒருங்கிணைந்த சந்தை வளாகம்

சென்னை

திருவொற்றியூர்

மாநகராட்சி சார்பில் திருவொற்றியூரில் ரூ.8 கோடி செலவில் ஒருங்கிணைந்த சந்தை வளாகம் அமையவுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் திருவொற்றியூரில் ரூ. 8 கோடி செலவில் ஒருங்கிணைந்த சந்தை வளாகம் அமைக்கப்படும் என திருவொற்றியூர் மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல வார்டுக் குழு மாதாந்திரச் சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கழிப்பிடம், பள்ளிக் கட்டடங்கள் சீரமைப்பு, சாலைகள் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளுக்காக ரூ.2.50 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகள் குறித்த 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பேசிய மாமன்ற உறுப்பினர்கள் கொசு ஒழிப்பு, சுகாதாரம், குடிநீர், தெருவிளக்குகள், சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு, திருவொற்றியூர் மார்க்கெட் பழுதடைந்துள்ள நிலையில் இதனை இடித்து விட்டு அதே இடத்தில் சென்னை மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 8  கோடி செலவில் காய்கறி, மளிகை, அசைவ உணவு பொருள்களை விற்பனை செய்யும் வகையில் இரண்டு அடுக்குகள் கொண்ட ஒருங்கிணைந்த சந்தை வளாகம் புதிதாகக் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கி ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார் தனியரசு.

கூட்டத்தில் மண்டல அலுவலர் நவேந்திரன், மண்டல மருத்துவ அதிகாரி டாக்டர் லீனா, செயற்பொறியாளர் உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top