Close
நவம்பர் 22, 2024 4:13 காலை

பள்ளிகளில் வளர்ச்சித்திட்டப்பணிகள்: ஆட்சியர் மெர்சி ரம்யா நேரில் ஆய்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஒன்றியம், பெருங்களூர் ஊராட்சி மற்றும் வடவாளம் ஊராட்சிகளில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை ஒன்றியம், பெருங்களூர் ஊராட்சி, மணவாத்திப்பட்டி, மேட்டுப்பட்டி, வடவாளம் ஊராட்சி, இச்சடி ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், தலா ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் வைப்பறையுடன் கூடிய சமையலறை கூடங்களையும், மாணவ, மாணவிகளின் கற்றல், கற்பித்தல் திறன்கள் குறித்தும்,  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளுக்கும் தரமான கல்வி அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், தொடக்கப்பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டத்தினை செயல்படுத்தி குழந்தைகளின் கற்றல் திறன்களை மேம்படுத்துதல், காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதை முன்னிட்டு புதிய சமையலறை கூடங்கள் கட்டப்பட்டு வருதல் போன்ற பல்வேறு கல்வித் திட்டங்களை  தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்கள்.

அதனடிப்படையில் பெருங்களூர் ஊராட்சி மற்றும் வடவாளம் ஊராட்சிகளில் உள்ள தொடக்கப்பள்ளிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், தலா ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் வைப்பறையுடன் கூடிய சமையலறை கூடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை
கட்டடப்பணியை பார்வையிட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா

இப்பணிகள் அனைத்தும் உரிய காலத்திற்குள் உயர்ந்த தரத்துடன் கட்டி முடித்து மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும், மேலும் பள்ளிக்கு வருகைதரும் குழந்தைகளுக்கு இடையூறு ஏற்படாதவண்ணம் பணிகளை மேற்கொள்ளவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யாஅறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, பெருங்களூர் ஊராட்சியில் செயல்பட்டுவரும் இ-சேவை மையத்தினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்யர், அதன் செயல்பாடுகள் குறித்தும், முதலமைச்சரால் செயல்படுத்தப்படவுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் பெறப்படும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வது தொடர்பாக தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்தும், மேலும் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, பொதுமக்களின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று விண்ணப்பம் விநியோகம் செய்வது குறித்தும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்கும் நாள் மற்றும் நேரம் குறித்த டோக்கன் விநியோகம் குறித்தும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊராட்சி நிருவாகத்தின் சார்பில் தகுந்த ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், விளம்பர பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர்மெர்சி ரம்யா அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, இச்சடி தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து, எண்ணும் எழுத்தும் திட்டத்தின்கீழ் செயல் வழியிலும், விளையாட்டு வழியிலும் குழந்தைகளின் கற்கும் திறனின்கீழ்,  குழந்தைகளின் வாசிப்பு திறன்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளில், வருவாய் கோட்டாட்சியர் .முருகேசன், உதவி கோட்டப் பொறியாளர் கலைவாணி, வட்டார வளர்ச்சி அலுவலர் .குமாரவேலன், வட்டாட்சியர் விஜயலட்சுமி, ஊராட்சிமன்றத் தலைவர்கள் .சரண்யா ஜெய்சங்கர், அருள்சிறுமலர் ஞானபிரகாசம், உதவி பொறியாளர்கண்ணகி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top