Close
நவம்பர் 22, 2024 12:29 காலை

மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்தல்… 34 வது வார்டில் விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்ைட

மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய காங்கிரஸ் கவுன்சிலர் ராஜாமுகமது

மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து நகராட்சியிடம் அளிப்பது தொடர்பாக  நகராட்சி  கவுன்சிலர் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 34 வது வார்டில் புதுக்கோட்டை நகராட்சி தூய்மை இந்தியா இயக்கம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை மக்காத குப்பைகள் பொது மக்களிடமிருந்து தூய்மை பணியாளர்கள் வாங்கும் பொழுது அதனை தனித்தனியாக வாங்குவது குறித்தான நகர் மன்ற உறுப்பினர் ராஜா முகமது பொது மக்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி விளக்கம் அளித்தார்

நகராட்சி மூலம் பிளாஸ்டிக் பொருட்களை தனியாக எடுத்து அதனை அரைத்து தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது மற்ற காய்கறி உள்ளிட்ட பொருட்களை அரைத்து உரங்கள் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது இந்த குப்பைகள் வழங்கும் போது மக்கள் தூய்மை பணியாளர்களுக்கு உதவ வேண்டும் என்பன உள்ளிட்ட  அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினார்

இந்த விழிப்புணர்வு நிகழ்வில் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பணி புரியும் அலுவலர்கள் பணியாளர்கள் உடன் இருந்தனர்

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 42 வார்டுகளிலும் சுமார் 21 வாகனங்கள் தற்போது பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top