ஆறாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
6-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வருகின்ற ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6 வரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறுகிறது. புத்தகத்திருவிழா குறித்து பொதுமக்களி டையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தின் அருகில் தொடங்கிய இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, கோட்டாட்சியர் எஸ்.முருகேசன், ஆதிதிராவிட நல அலுவலர் கி.கருணாகரன், புதுக்கோட்டை வட்டாட்சியர் விஜயலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, புத்தகத் திருவிழா மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தங்கம் மூர்த்தி, அ.மணவாளன், எஸ்.டி.பாலகிருஷ்ணன், ம.வீரமுத்து, ஜீவி, மு.முத்துக்குமார், க.சதாசிவம், த.விமலா, ராசி.பன்னீர் செல்வம், ஈ.பவனம்மாள், மு.கீதா மற்றும் அறிவியல் இயக்க நிர்வாகிகள், வரவேறப்புக்குழு உறுப்பினர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவர்கள் புத்தகங்களை கையில் ஏந்தியும், பாலூன்க ளைப் பறக்கவிட்டும், புத்தகங்களின் அவசியம் குறித்து முழுக்கங்களை எழுப்பியவாறும் நடைபெற்ற இப்பேரணி பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை, வழியாக கீழ ராஜ வீதி, வடக்கு வீதிவழியாக நகர் மன்றத்தில் நிறைவ டைந்தது.
இதைப்போல பொன்னமராவதி, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, மாத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் பேரணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.