Close
மே 12, 2024 7:39 காலை

புதுக்கோட்டையில் 514 மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 514 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  வழங்கினார். உடன் ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்  மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற  நிகழ்வில், மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி  (25.07.2023) வழங்கினார்

பின்னர் அமைச்சர்   தெரிவித்ததாவது:  பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை  முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்கள். இதன்மூலம் கிராமப் புறங்க ளில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் உயர் கல்வி கற்பதற்கான அடிப்படை திறன் களை மேம்படுத்தி வருகிறார்கள்.

அதன் அடிப்படையில் வருடந்தோறும் மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் மூலமாக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகள் அனைத்தும் மாணவ மாணவி களுக்கு உரிய முறையில் பயனளிக்கும் வகையில் உரிய காலத்திற்குள் வழங்க வேண்டும்.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி  தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,028 மாணவர்களுக்கும், 8,257 மாணவிகளுக்கும் என மொத்தம் 14,285 நபர்களுக்கு ரூ.6.88 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் இந்த வருடத்தில் வழங்கப்பட உள்ளன.

பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக புரட்சி பெண்ணாக மாணவிகள் அனைவரும் விளங்குவதற்கு கல்வி மிக முக்கியமாகும்.  முதலமைச்சரின்  தொலைநோக்கு பார்வையில் மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களது சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற அடிப்படையில் உங்கள் அனைவருக்கும் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி உள்ளார்கள்.

இதன் வாயிலாக மாணவிகள் அனைவரும் தங்களது படிப்பில் முழுகவனம் செலுத்தி தங்களது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இன்றைய சூழ்நிலையில் அனைத்து பணி நிலைகளிலும் மகளிர் அனைவரும் தங்களது திறமையை நிருபித்து வருகின்றனர்.

நீங்கள் பெற்றுள்ள விலையில்லா மிதிவண்டிகள் மூலம் உங்களுக்குத் தேவையான உடற்பயிற்சி பெறுவதுடன், காலத்திற்கு கல்வி பயில்வதற்கும், உடல் வலிமை ஆரோக்கியம் பெறுவதற்கும், பெற்றோர்களின் சுமையை குறைப்பதற்கும் வழிவகை செய்கிறது.

எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களது படிப்பின் மீது முழுகவனம் செலுத்தி எதிர்காலத்தில் சிறந்த குடிமகனாக நாட்டிற்கும், வீட்டிற்கும் விளங்க வேண்டும் என்றார்  சட்ட அமைச்சர்  எஸ்.ரகுபதி.

இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்  த.ஜெயலட்சுமி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர் பாஷா, பள்ளித் துணை ஆய்வாளர்கள் குரு மாரிமுத்து, வேலுச்சாமி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப் பாளர் சாலை செந்தில், நகர்மன்ற உறுப்பினர்கள் செந்தாமரை பாலு, பால்ராஜ், வட்டாட்சியர் விஜயலட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்;
.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top