Close
நவம்பர் 22, 2024 5:24 மணி

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடிய மாணவர்கள்

புதுக்கோட்டை

புத்தகத்திருவிழாவில் பேசிய எம்எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார்

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் நிகழ்வு ஒவ்வொரு நாள் மாலையிலும் நடைபெற்று வருகிறது.

இந்தப் புத்தகத் திருவிழாவில் பகல் நேரங்களில் மாணவர் களை ஈர்க்கும் வகையில் புத்தக விற்பனையோடு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் மூலமாக கோளரங்கம், இரவு நேர வான் நோக்குதல், நடமாடும் அறிவியல்  பரிசோத னைகள் அடங்கிய பேருந்து போன்றவற்றின் மூலம் அறிவியல் விழிப்புணர்வு வசதிகளும்  வழங்கப்படுகின்றன.

மேலும், மாணவர்களை ஒருங்கிணைத்து அறிவியல் அற்புதங்களை விளக்குதல், எளிய அறிவியல் பரிசோத னைகளை விளக்கும் மந்திரமா? தந்திரமா? கணக்கும் இனிக்கும், விஞ்ஞானிகள் சந்திப்பு போன்ற நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டு நடத்தப்படுகின்றன. இதற்காக மாநில அளவில் கருத்தாளர்கள் வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்கு சிறப்பு அமர்வுகள் நடத்தப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு பெ.புவியரசு தலைமை வகித்தார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி முனைவர் ஆர்.ராஜ்குமார் அறிவியலும் விவசாயமும் எனும் தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அறிவியல் அற்புதங்கள் :

புதுக்கோட்டை
புத்தகத்திருவிழாவில் பேசுகிறார், குழந்தைகள் நல குழுவின் தலைவர் க.சதாசிவம்,

குழந்தைகள் நல குழுவின் தலைவர் க.சதாசிவம், சுவை மற்றும் நுகர்வு உணர்வுகள் அறிதல், மூளை செயல்படும் விதம், மாணவர்களுடன் எளிய அறிவியல் பரிசோதனை களையும், காகிதங்களில் பல்வேறு உருவங்களை செய்யும் முறை பற்றியும் பயிற்சி அளித்தார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் அ.மணவாளன், எஸ்.டி.பாலகிருஷ்ணன், மு.முத்துக்குமார், த.விமலா, புதுகை பிலிம் சொசைட்டி நிறுவனர் எஸ்.இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top