Close
ஏப்ரல் 10, 2025 10:46 மணி

மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து அரிமளத்தில்  மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு

இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், தொடர்ந்து நடைபெற்று வரும் இனக்கலவரத்தை கண்டித்தும் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத்தில் ஒன்றியச் செயலாளர் அடைக்கலமேரி தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.சுசிலா, மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச்சேரி சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.வி.ராமையா உள்ளிட்டோர் கண்டன உரை ஆற்றினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top