அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் சவுதி அரேபிய சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிய பெண் செவிலியர் களுக்கான தேர்வு முகாம்கள் நடைபெறவுள்ளது.
சவுதி அரேபிய சுகாதார அமைச்சகத்தில் பெண் செவிலியர்கள் பணிபுரிவதற்கு குறைந்த பட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் B.Sc(Nursing) தேர்ச்சி பெற்ற 37 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். இப்பணியிடத்திற்கு ரூ.80,000/- முதல் ரூ.1,00,000/– வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பதிவு செய்வதற்கு ஏதுவாக 06.09.2023 வரை கீழ்க்கண்டவாறு பல்வேறு மாவட்டங்களில் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
17.08.2023 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம். நாகர்கோவில் மற்றும் விழுப்புரம்.
21.08.2023 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சேலம்.
25.08.2023 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், வேலூர்.
29.08.2023 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருவள்ளூர்.
01.09.2023 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சென்னை மற்றும் கோயம்புத்தூர்.
04.09.2023 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருநெல்வேலி.
05.09.2023 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஈரோடு.
06.09.2023 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், இராமநாதபுரத்திலும் நடைபெறவுள்ளது.
இப்பணியிடத்திற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள முகாம்களில் நேரிடையாக கலந்து கொண்டு பயன் பெறலாம்.
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக் காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத் தளமான தொடர்பான மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 04322-222287 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.மேலும் www.omcmanpower.com என்ற இணைய தளத்திலும் பார்த்து விவரம் அறிந்து கொள்ளலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, தெரிவித்துள்ளார்.