Close
செப்டம்பர் 20, 2024 6:29 காலை

புதுக்கோட்டையில் ரூ 1.94 கோடியில் நவீன டிஜிட்டல் நூலக கட்டுமானப் பணிகள்: நகர்மன்ற தலைவர் ஆய்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சியில் ரூ.1.94 கோடியில் கட்டப்பட்டு வரும் டிஜிட்டல் நூலகக்கட்டுமானப் பணியை ஆ.ய்வு செய்த நகராட்சித்தலைவர் திலகவதிசெந்திஸ், துணைத்தலைவர் எம். லியாகத் அலி உள்ளிட்டோர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் முறையாக புதுக்கோட் டை நகராட்சி சார்பில் ரூ.1.94 கோடி மதிப்பீட்டில் காந்தி பூங்கா அருகே மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயார் செய்வதற்கான பயிற்சி வகுப்பறைகளுடன் விரைவில்  திறக்கப்பட இருக்கும்  கூடிய நவீன டிஜிட்டல் நூலக கட்டுமானப் பணியை  நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில்   நேரில்  பார்வையிட்டுஆய்வு செய்தார்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் முறையாக காந்தி பூங்கா அருகே புதுக்கோட்டை நகராட்சி சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.94 கோடி மதிப்பீட்டில் அறிவு சார் மையம் மற்றும் டிஜிட்டல் படிப்பகம்  மற்றும் பல்வேறு போட்டி தேர்வுக்காக மாணவர்களை தயார் படுத்தக்கூடிய விதத்தில் நவீன தொழில்நுட்பத்தில்  நூலகம் கட்டப்பட்டு வருகிறது.

இப்பணிகளை புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், நகர் மன்ற துணைத் தலைவர் எம். லியாகத் அலி, நகராட்சி ஆணையர்  மற்றும்  நகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

புதுக்கோட்டை
டிஜிட்டல் நூலகத்தை ஆய்வு செய்த நகராட்சி நிர்வாகிகள்

மேலும் இரண்டு தளங்களாக கட்டப்பட்டு வரும் நூலகத்தில் 11 கணினிகள் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் பொது அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வதற்காக பல்வேறு பயிற்சி வகுப்புகள் உள்ளிட்டவைகள் இந்த நூலகத்தில் செயல்படுத்த உள்ளனர்.

மேலும் புதுக்கோட்டை நகராட்சி சார்பில் புது பொலிவுடன் கட்டப்பட்டு வரும் இந்த நூலகத்தினை வருகின்ற 25 -ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைக்கிறார்.

அதற்கான பணிகள் தற்பொழுது வேகமாக நடைபெற்று வருகிறது.  புதுக்கோட்டை மாவட்டத்திலேயே இரண்டு தளங்கள் கொண்டு டிஜிட்டல் முறையில் கட்டப்பட்டு வரும் முதல் நூலகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top